???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2019  00:13:31 IST

கோவா தலைநகர் பனாஜியில் நேற்று சரக்கு, சேவைவரி கவுன்சிலின் 37-வது கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்மலா சீதாராமன், அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பெரு நிறுவனங்களுக்கு அதிரடியாக சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அதில் சில முக்கிய அம்சங்கள்:

* பொருளாதார வளர்ச்சியையும், முதலீட்டையும் ஊக்குவிக்கும் வகையில், 2019௨0-ம் நிதி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தும் வகையில் வருமான வரிச்சட்டத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு பிற விலக்குகளோ, சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

இதுவரை பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி 30 சதவீதமாக இருந்தது.

இந்த நிறுவனங்களுக்கான வரி சர்சார்ஜ் (கூடுதல் கட்டணம்), செஸ் (மிகை வரி) உள்பட மொத்தம் 25.17 சதவீதமாக இருக்கும். மேலும், ‘மேட்’ என்று அழைக்கப்படுகிற குறைந்தபட்ச மாற்றுவரியும் செலுத்த வேண்டியது இல்லை.

* உற்பத்தி துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அந்த வகையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்னும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பலம் சேர்க்கவும், வருமான வரி சட்டத்தில் இன்னும் ஒரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு, 2019௨0-ம் நிதி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி அக்டோபர் 1-ந் தேதியோ அல்லது அதன் பின்னரோ தொடங்கப்படுகிற புதிய தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.

எந்த விலக்குகளையும், சலுகைகளையும் பெறாமல், 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோ, அதற்கு முன்னதாகவோ உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்கள் இந்த பலனைப் பெற முடியும்.

இந்த நிறுவனங்கள் சர்சார்ஜ், செஸ் உள்பட எல்லாம் சேர்த்து மொத்தம் 17.01 சதவீதம் வரி செலுத்தினால் போதும். (பழைய வரி வீதம் 29.12 சதவீதமாக இருந்தது.)

* ஒரு நிறுவனம் சலுகை வரி முறையை தேர்வு செய்யாமல், வரி விலக்கு அல்லது சலுகை பெற்றால், அந்த நிறுவனம் முன் திருத்தப்பட்ட விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இருப்பினும், வரி விடுமுறை காலம் முடிந்த பின்னர் அல்லது விலக்கு காலம் முடிந்ததும் சலுகை வரி முறைக்கு மாறலாம்.

அப்படி சலுகை வரி முறைக்கு மாறியதும், இத்தகைய நிறுவனம் 22 சதவீத வரி செலுத்தினால் போதும். அப்படி சலுகை முறைக்கு மாறிய பின்னர் அதில் இருந்து திரும்ப மாற முடியாது.

* விலக்குகளையும், சலுகைகளையும் பெறுகிற நிறுவனங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* மூலதன சந்தைக்கு நிதி ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், நிதி சட்டம் 2019-ன் பிரிவு 2-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ், ஒரு கம்பெனியின் பங்கு விற்பனையால் வருகிற மூலதன ஆதாயத்துக்கும், பங்கு சார்ந்த நிதியின் மூலமாக கிடைக்கிற ஆதாயங்களுக்கும் பொருந்தாது.

* கைகளில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கிற தொகையின் மீதான செல்வ வரி விலக்கிக்கொள்ளப்படுகிறது.

* பட்டியலிட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அவை 2019-ம் ஆண்டு, ஜூலை 5-ந் தேதிக்கு முன்னர் பங்குகளை பங்குதாரர்களிடம் இருந்து சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து திரும்ப வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

அவசர சட்டத்தின் மூலமாக வருமான வரி சட்டம் 1961 மற்றும் நிதி சட்டம் 2019 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஒரே நாளில் 1921 புள்ளிகள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...