???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: நிர்மலா பெரியசாமிக்கு பதவி!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  22:31:11 IST

அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு புதிய நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சி தலைமையகம் வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் ப. மோகன் அமைப்புச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தேர்தல் பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவசாயப்பிரிவு செயலாளராகவும், நிர்மலா பெரியசாமி கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அனைத்துலக எம்ஜிஅர் மன்ற இணைச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அம்மா பேரவை இணைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் 5 புதிய  நிர்வாகிகளை நியமித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...