???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு காரணம் ஓலாவும் உபரும்தான்: நிதியமைச்சர்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:23:20 IST

நாட்டில் நிலவிவரும் வாகனத் துறை நெருக்கடி குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இன்றைய கால இளைஞர்கள் கார் வாங்குவதைவிட, ஓலா, உபர் மூலம் போவதைத்தான் விரும்புகிறார்கள். புதிய கார்களை வாங்க அவர்கள் விரும்பவதில்லை. அதுவும் வாகனத் துறை பாதிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது' என்று பேசியுள்ளார்.

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனையிலும் 70 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி, சென்னையில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள். அரசில் அங்கமாக இருக்கும் அனைவரும் பல்வேறு பிரிவினரிடையே தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறோம்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு, “பஸ் மற்றும் ட்ரக் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும் இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...