???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்மலா தேவிக்கு ஜாமின்: ஊடகங்களில் பேசுவதற்கு தடை

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:50:54 IST

அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. அவர், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, ஒரு மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவின் அடிப்படையில் நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
 
இதுதொடர்பான, வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. சுமார் 200 நாள்களுக்கும் மேலாக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்துவருகிறார். நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபானி உத்தரவிட்டார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...