???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   15 , 2020  20:55:35 IST

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்டை, டெல்லி அமர்வு நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி பிறப்பித்தது. இதையடுத்து வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதனை சுட்டிக்காட்டி, கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகே தூக்கிலிட முடியும் என திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் அவர் கூறினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனைக்கான வாரண்டில் எந்த பிழையும் இல்லை என தெரிவித்தனர்.

இந்த மனு விசாரணையை இழுத்தடிப்பதற்கான உத்தியாகவே தெரிவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம் ஒரு நீதிமன்றத்தை மற்றொரு நீதிமன்றத்துக்கு எதிராக நிறுத்தி விளையாட முயற்சிப்பதாகவும் குற்றவாளிகளை சாடினர்.  இதையடுத்து நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, முகேஷ் சிங் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...