???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   17 , 2020  21:05:54 IST

டெல்லியில் மருத்துவ மாணவி 2012-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

குற்றவாளிகள் நால்வரும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்கிலிடுவதற்கான எல்லா பணிகளும் விரைவுபடுத்தப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்சிங் குடியரசுத் தலைவர் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரிடம் கருணை மனுதாக்கல் செய்தார். அந்த கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

இந்த நிலையில் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் இருப்பதால் தனது மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் முகேஷ்சிங் மனுதாக்கல் செய்திருந்தார். இதுசம்பந்தமாக டெல்லி திகார் சிறை நிர்வாகத்திடமும், டெல்லி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டது. விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்,

இதற்கிடையே, முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனால், நால்வருக்கும் மரண தண்டனை உறுதியானது. ஆனால், குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரித்தற்கு பின்பு 14 நாட்கள் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என விதிகள் இருக்கிறது. இதனால், ஏற்கனவே, பிறப்பிக்கப்பட்ட வாரண்டின் படி 22-ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது.

இதை டெல்லி அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் புதிய வாரண்டை பிறப்பித்துள்ளது. சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்பதால் நால்வருக்கும் அன்றைய தினம் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது உறுதி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...