???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   16 , 2020  21:12:39 IST

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான்.

மீதமுள்ள முகே‌‌ஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

வருகிற 22-ந்தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டை எதிர்த்து ஐகோர்ட்டில் முகே‌‌ஷ் குமார் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘நிர்பயா வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடப்பதால், குற்றவாளிகளை 22-ந்தேதி தூக்கில் போடக்கூடாது’ என முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் வாதிட்டார்.

இதைப்போல குற்றவாளி ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதால் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி வைக்க வேண்டும் என டெல்லி அரசு சார்பிலும் கோரிக்கை விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கீழ் கோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தூக்கிலிடப்படும் நடவடிக்கையின் நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் மரண வாரண்டை ரத்து செய்யக்கோரி முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் விசாரணை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அங்கும் இந்த மனு நேற்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை முடித்து நீதிபதி தனது உத்தரவில், ‘மரண வாரண்டு பிறப்பித்து நான் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யமாட்டேன். ஆனால் ஒரு கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்தவகையில் 22-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கை ஒன்றை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதி தூக்கில் போடப்படமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்களது தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போகிறது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...