???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிரவ் மோடியின் ஜாமின் மனு: லண்டன் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  00:09:04 IST

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கி மோசடியில் ஈடுபட்ட இந்திய வைர வியாபாரி நிரவ்மோடி, லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், லண்டன் சிறையில் அடைக்கப்பட்ட நிரவ் மோடி, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3 முறை ஜாமின் மனு தாக்கல் செய்தார். நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்கினால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடலாம் என இந்த மனு 3 முறையும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, 4-வது முறையாக நிரவ் மோடி சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்பில்லை என நிர்வமோடி சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஜாமின் மனு மீது லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...