???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  08:22:34 IST

மும்பை வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தப்பி ஓடிய நிரவ் மோடி லண்டனில் வாழ்ந்து வீடியோ காட்சிகள் பரவலாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதையடுத்து லண்டனில் வாழ்ந்துவரும் நிரவ் மோடியைக் கைது செய்து நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியது.
 
இந்திய அரசின் மனுவை ஏற்ற லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. வார்ண்ட் கிடைத்ததையடுத்து லண்டனிலேயே நிரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சிறிது நேரத்திலேயே நிரவ் மோடி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மோசடி குற்றம் நிரூபனம் ஆனால் நிரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.
 
நிரவ் மோடியைத் தொடர்ந்து அவரது மனைவி அமி மோடிக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...