அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

Posted : சனிக்கிழமை,   ஜுலை   11 , 2020  14:22:54 IST


Andhimazhai Image

    கோவிட்-19 கொள்ளை நோய்க்கான சிகிச்சையில் ரெம்டெசிவர் எனும் மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சித்த மருந்தான நிலவேம்புவையும் அதைப்போலவே பயன்படுத்த முடியும் என்று சுவீடன் பல்கலைக்கழகத்துடன் இந்தியப் பல்கலைக்கழகமும் இணைந்துசெய்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா கிருமித் தொற்றால் உண்டாகும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து முயற்சிகள் உலக அளவில் தீவிரமாக நடந்துவருகின்றன. தடுப்புமருந்து வரும்வரையில் இக்கொள்ளைநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது மருத்துவத் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, அதிக அளவில் திடீரென நிகழும் மரணங்களை எப்படி தடுப்பது, குறைப்பது என்பதில்தான், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே பல பெருந்தொற்று- கொள்ளை நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கிருமியெதிர்ப்பு மருந்துகளை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் பயன்படுத்திப் பார்க்கின்றனர். மலேரியாவுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரோகுளோரோகுயின், எச்.ஐ.வி. நோய்க்குப் பயன்படுத்தப்பட்ட உலோபினோவிர், ரிட்டினோவிர் மற்றும் ஏ, பி வகையறா நச்சுக்காய்ச்சல் நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒசெல்டாமிவிர், அசித்ரோமைசின் ஆகிய மருந்துகளை, கோவிட்-19 கொள்ளைநோய் சிகிச்சையில் பயன்படுத்திவருகின்றனர்.
 

 

இந்த மருந்துகளின் சில கிருமி எதிர்ப்புப் பண்புகள், டெங்கு காய்ச்சலுக்கு பரவலான தீர்வைத் தந்த சித்த மருந்தான நிலவேம்புவிலும் இருக்கலாம் என்கிற கருதுகோள், நவீன மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களிடம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சுவீடனின் ஸ்டாக்ஃகோம், கே.டி.எச். ராயல் தொழிழ்நுட்பக் கல்விக்கழக ஆராய்ச்சியாளர் அருள் முருகன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயகாந்தன், அதே ஊரைச் சேர்ந்த உமையாள் இராமநாதன் கல்லூரியின் சித்ரா ஆகியோர் இணைந்து, ஆய்வில் ஈடுபட்டனர். சுவீடன் (அரசின்) உள்கட்டமைப்புக் குழுமத்தின் நல்கையுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவானது ‘உயிர் மூலக்கூறு அமைப்பு மற்றும் இயக்கவியல் ஆய்விதழில்’, (JOURNAL OF BIOMOLECULAR STRUCTURE AND DYNAMICS)  வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த ஆய்வு நிலவேம்புவிலுள்ள மூலக்கூறுகள் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

 இந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஃகோமில் உள்ள கே.டி.எச். இராயல் நுட்பக் கல்விக்கழக- வேதியியல், உயிரிநுட்பவியல் மற்றும் சுகாதாரப் பள்ளியின் ஆராய்ச்சி வழிகாட்டியும் ஆசிரியருமான அருள் முருகனிடம் பேசினோம். ஆய்வின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கினார்.

 

 


” பெருந்தொற்று நோய்களுக்கு தடுப்புமருந்து வரும்வரை தற்காலிகமாக முந்தைய தொற்றுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட சில மருந்துகளை மருத்துவமனை சோதனை என்கிற அளவில் பயன்படுத்திவருகின்றனர். எடுத்துக்காட்டாக ரெம்டெசிவரைச் சொல்லலாம். ஆனால் இவற்றின் விலை அதிகமாக உள்ளது. இவற்றின் பக்க விளைவுகளும் கணிசமானவை. ஆனால் இதே தன்மைகொண்ட இயற்கையான தாவர வேதிமங்களால் பெரும் பக்க விளைவுகள் இல்லை. நெடுங்காலமாக நாம் அதை உணவைப்போலவும் எடுத்துக்கொண்டு வருகிறோம். செலவு குறைவானதும்கூட. எனவே நிலவேம்பு தாவரத்தை உயிரி மூலக்கூறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.” என்கிறார், விஞ்ஞானி அருள் முருகன்.
 


இவற்றிலுள்ள பைட்டோகெமிக்கல் எனப்படும் ’தாவர வேதிமங்கள்’, வைரஸ் கிருமிகளின் ஊடுருவலையும் அதன் உள்நுழைவதற்கு இசைவான உயிரணுக் கண்டறிதலையும் படியாக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பவையாக உள்ளன.

 


ஆராய்ச்சியாளரும் அழகப்பா பல்கலை. உயிரித்தகவல் நுட்பவியல் துறையின் தலைவருமான பேராசிரியர் ஜெயகாந்தன், “ நிலவேம்புவில் உள்ள மருந்துத்தன்மைகொண்ட ஆண்டிரோகிராபொலைடுகளும் அதன் சேர்மங்களும் மலேரியா, புற்றுநோய், எச்.ஐ.வி. எதிர்ப்பாகவும், உயிர் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருளாகவும் செயல்படுகின்றன. நிலவேம்புவானது எச்1என்1, எச்பிவி, எச்சிவி, எச்.ஐ.வி.,எச்.எஸ்.வி.-1, சிக்குன்குனியா, எச்.பி.வி, இ.பி.வி. ஆகிய வைரஸ் கிருமிகளுக்கு எதிரான பண்பைக் கொண்டிருப்பது முன்னரே ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் நிலவேம்புவின் நோய் எதிர்ப்பு மூலக்கூறை கணினி மூலமான வேதியியல் ஆராய்ச்சி (COMPUTATIONAL RESEARCH) முறைப்படி கோவிட்-19 கிருமி புரத மூலக்கூறுடன் இணைத்து ஆய்வுசெய்தோம். இதில் கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற்கை மருந்துகளைவிட  நிலவேம்பு மூலக்கூறு கூடுதலான கிருமியெதிர்ப்புத் தன்மையுடன் இருப்பது தெரியவந்தது. அறிவியல்ரீதியாகச் சொன்னால், மற்ற மருந்துகளின் தாவரவேதிமங்களைவிட நிலவேம்பு தாவரத்தின் இலைகளில் உள்ள இந்த தாவரவேதிமப் புரதமானது அதிகமான கொரோனா கிருமியுடன் பிணையும் தன்மையைக் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.” என ஆய்வின் சாரத்தைக் கூறினார்.ரெம்டெசிவர் போன்ற மருந்துகளை கிளினிக்கல் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதைப்போல, நிலவேம்புவின் இந்த மூலக்கூறையும் நவீன அறிவியல் முறைப்படி ஆய்வைமுடித்து மருந்தை உருவாக்கினால், அதன் பக்க விளைவுகளைப் பற்றி அச்சமடையாமல் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்தமுடியும்.

 

நிலவேம்பு மூலக்கூறு தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வை ரூர்க்கி  ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மேற்கொள்ள முயற்சிகள் நடந்துவருகின்றன.

 

- இர.இரா.தமிழ்க்கனல்


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...