???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிகோனர் பர்ரா - சிலியின் மகத்தான கவிஞன்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   24 , 2018  01:49:10 IST


Andhimazhai Image

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உண்மைகள் புத்தகங்களில் இருப்பதில்லை. நீங்கள் அவற்றை கழிவறை சுவர்களில் வாசிக்கலாம். என்று தன் கவிதைகளில் முன்னறிவித்த சிலியின் குறிப்பிடத்தகுந்த கவிஞர் நிகோனர் பர்ரா தனது 103வது வயதில் நேற்று காலமானார். தன்னை ஒரு எதிர் கவிஞன் என்று அறிவித்துக்கொண்டவர் நிகோனர் பர்ரா. அதீத கற்பனையும் கவித்துவமும் மிளிரும் வார்த்தைகள், கருப்பு நகைச்சுவை, என தனது கவிதைகளின் வடிவத்தை தேர்ந்துகொண்டவர் நிகோனர் பர்ரா ''என்னுடைய கடுமையான படிமங்களின் வறட்சியால் நான் வால்டிவியா நகருக்கு வரவில்லை. ஒரு கவிஞனாக தோற்றம் கொடுக்கவும் புனித கடமைகளை வெளியேற்றவும் தான் வந்தேன். உயர்ந்த நண்பனாக என்னிடம் இலக்கியத்தை எதிர்ப்பார்க்காதீர்கள். ஒருவேளை நடுவர்களாகிய நீங்கள் என்னிடம் எதிர்ப்பார்த்தீர்கள் எனில் எனக்கு தந்த விருதை திருப்பித் தர தயாராக உள்ளேன்.’’ என பரிசளிப்பு மேடையிலேயே முழங்கிய கவிஞர் அவர். 2011ஆம் ஆண்டு ஸ்பானிய மொழியில் வழங்கப்படும் உயரிய விருதான ’பிரிமியோ செர்வண்டெஸ்’ விருதளித்து கௌரவிக்கப்பட்டவர். சிலி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் இயற்பியல் பாடம் போதித்தவர். கணிதவியலாளர். நிகோனர் பர்ராவின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்த சிலியின் அதிபர் ‘’ சிலி இலக்கிய உலகின் ஆகச்சிறந்த கவி ஆளுமையை இழந்துவிட்டோம்’’ என்கிற கூற்று மிகை அல்ல. ஆழ்ந்த அஞ்சலி.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...