???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   19 , 2019  23:09:38 IST

எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில், 'நேஷனல் எக்சிட் டெஸ்ட்' எனப்படும், 'நெக்ஸ்ட்' தேர்வு எழுத வேண்டும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  இதற்கான புதிய மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,

தேசிய மருத்துவ கழக மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அந்த மசோதா, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதால், அதனை அதிமுக எதிர்க்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‛தேசிய மருத்துவ கழக மசோதாவை, 2016-ம் ஆண்டிலேயே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்தது என்றும், தற்போது மீண்டும் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மசோதா தமிழகத்தின் உரிமையை பறிக்கும் என்பதால், அதனை ஏற்க முடியாது என ஏற்கெனவே மத்திய அரசிடம் தெரிவித்து இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து இங்கே வரும் மாணவர்களுக்கு வேண்டுமானால் இந்த தேர்வை நடத்தலாம் எனக்கூறிய அமைச்சர், தமிழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை நடத்தக்கூடாது என்றும் அதை நாம் ஏற்கவும் மாட்டோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் எனவும், எதிர்த்து குரல் கொடுப்பார்கள் எனவும் உறுதி அளித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...