![]() |
அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்புPosted : வியாழக்கிழமை, ஜுன் 30 , 2022 17:01:48 IST
![]() மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சிவசேனை அதிருப்திக் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
மாநிலத்தில் நிலவிவந்த ஆட்சிக் குழப்படிக்கு இடையே, முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று உத்தவ் தாக்கரே விலகினார். அசாமில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவு கோவா திரும்பினர்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் இன்றோ நாளையோ முதலமைச்சராகப் பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில்,அதிருப்திக் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் அவரும் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினர். தெற்குமும்பையில் உள்ள பட்னவிசின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், இருவரும் மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரியைச் சந்தித்தனர்.
ஆளுநரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய பட்னவிஸ், ஷிண்டே தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். அதேசமயம், தான் அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பையும் வகிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இருவருக்கும் ஆளுநர் கோசியாரி இனிப்பு ஊட்டினார். English Summary
Next Cm Eknath shinde - Fatnawis announced
|
|