அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 7- சிறகொடிந்த வலசை

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   22 , 2021  19:23:25 IST


Andhimazhai Image

மும்பை தாராவி பகுதியில் பிறந்து வளர்ந்த புதியமாதவி கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். இவர் எழுதியுள்ள ‘சிறகொடிந்த வலசை’ என்ற நாவலை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

புதியமாதவியிடம் நாவலின் கதைக்களம் என்ன என்பதைக் கேட்டோம்.

"கொரோனா காலத்தில் தாராவி பகுதியில் வசித்த மக்களைப் பற்றிய கதை தான் ‘சிறகொடிந்த வலசை’.

இந்தியாவின் ரூபாய் மதிப்பை நிர்ணயிக்கக் கூடிய மும்பை,  ஒரு மாநிலத்தை விட அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய நகரம். அப்படியான நகருக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்கான வருமானத்தை ஈட்டித்தரக் கூடிய பகுதி தாராவி. அந்தப் பகுதியில் வசிக்கக் கூடிய, ஒரு டிரைவரின் குடும்பத்தை வைத்துத்தான் முழு நாவலையும் எழுதியிருக்கிறேன். ஏன் ஒரு டிரைவரின் குடும்பத்தை மையப்படுத்தி எழுதினேன் என்றால்? மும்பையில் ஸ்கில்டு லேபர்கள் இருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் தாராவியைச் சேர்ந்தவர்கள். அதேபோல், மும்பையில் டாக்சி ஓட்டக் கூடியவர்கள், பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கார் ஓட்டக் கூடியவர்கள் எண்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் தமிழர்கள். கொரோனா வந்தபோது இவர்கள் அனைவருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. அப்போது தாராவி மக்கள் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை.


2019 மார்ச் 19ஆம் தேதி உறவினர் ஒருவரின் இறப்பிற்காக மும்பையிலிருந்து தமிழகத்திற்கு சென்றேன். அங்கு சென்ற அடுத்த நாளே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திலேயே மூன்று மாதங்கள் தங்க வேண்டியிருந்தது. அதன்பிறகு, திருநெல்வேலியிலிருந்து தாராவிக்கு காரிலேயே வந்தேன். அப்போது வழி நெடுக பார்த்த அனுபவங்களையும், தாராவியில் பார்த்த சம்பவங்களையுமே நாவலாக எழுதியிருக்கிறேன்.


ஊரடங்கின் போது மக்கள் அனுபவித்த வேதனைகளை ஊடகங்கள் மறைத்துவிட்டன. அதனுடைய சாட்சிகள் தான் நாங்கள். எங்களுடைய புனைவு தான் இந்தப் படைப்பு.


டிரைவர் வேலை செய்யும் தனது கணவனை இழந்த பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வதற்கு திட்டமிடுகிறாள். அதற்காக டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்கிறாள். ஆனால், அந்த டிராவல்ஸ்காரனோ பேருந்துக்குப் பதிலாக, லாரியை கொண்டு வந்துவிட்டு, இதில் தான் போக முடியும் என்கிறான். வேறு வழியில்லாமல், லாரியில் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்பவள், பாதி வழியிலேயே இறந்துவிடுகிறாள். கடைசியாக குழந்தைகள் மட்டுமே சொந்த ஊருக்குச் செல்கின்றனர். அந்த ஊர் விவசாயத்தை முற்றிலுமாக இழந்து, ரேஷன் கடையை மட்டுமே நம்பியிருக்கும் ஊராக இருக்கின்றது. அனாதைகளாக வந்து நிற்கும் சிறுவர்களை அந்த ஊர் எப்படி அணுகுகிறது என்பது தான்  ‘சிறகொடிந்த வலசை"  என்றார்.


நாவல்: சிறகொடிந்த வலசை
ஆசிரியர்: புதியமாதவி
பதிப்பகம்:அன்னை ராஜேஸ்வரி
விலை: ரூ.150

 

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...