அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 9 - வசந்தத்தைத் தேடி

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   24 , 2021  17:43:52 IST


Andhimazhai Image

அரசியல் செயல்பாடு, களப்பணி மூலம்  அறியப்பட்டவர் சாலமன். இவர் புதிதாக எழுதியுள்ள நாவலான ‘வசந்தத்தைத் தேடி’ சிந்தன் புக்ஸ் வெளியீடாக வரவுள்ளது. இது இவருடைய முதல் இலக்கியப் படைப்பாகும்.

 நாவலின் கதைக்களம் என்ன என்பது குறித்து சாலமனிடம் கேட்டோம்.
 
“சாதியாகப் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகங்களைப் பற்றிய கதை தான்  ‘வசந்தத்தைத் தேடி’ நாவல். கூவம் ஆற்றின் தலைமடையில் உள்ள கிராமம் தான் நாவலின் கதைக்களம்.
 
இந்தியாவில் சாதியாகப் பிரிந்து கிடக்கிற மக்கள் சில உரிமை சார்ந்த போராட்டங்களுக்காக ஒன்றாகக் கூடுகின்றனர். ஆனால், அவர்கள் ஆத்மார்த்தமாக ஒன்று சேர்வதில்லை. தங்களை உழைப்பாளியாக உணர்ந்து ஒரு வர்க்கமாகத் திரளவேண்டும். அப்படித் திரளும் போது தான் தொழிலாளி ஜனநாயகவயப்பட முடியும். அந்த இடத்தில் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது தான் ‘வசந்தத்தைத் தேடி’.

சாதி ஒழிந்தால் தான் வர்க்கமாகத் திரள முடியும். அதற்கான கதைக்களத்தைத் தேடும் போது தான் ‘வசந்தத்தைத் தேடி’நாவல் உருவானது.

சாதி தவறு என உணர்ந்து, ஊர் தெரு சேரித் தெருவோடு சேர்ந்து, வேறு ஒரு பகை சக்தியை எதிர்க்கும் போது, இந்த அரசு அவர்களை எப்படி அணுகுகிறது? இந்த அரசு அப்பொழுது யாருக்கானதாக செயல்படுகிறது என்பதை வசந்தத்தைத் தேடி உணர்த்தும்.

இந்த நாவல் சாதியம் கெட்டித் தட்டிக் கிடக்கிற ஊர் தெருவையும், கொடிய உழைப்புச் சுரண்டல் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்நிய தொழிற்சாலைகளையும் விளக்கி, இரண்டிலும் உள்ள உழைப்போரும் சாதி ஒழிப்பை ஏன் முன்னிறுத்த வேண்டும் என்பதையும் சாதி ஒழிப்பிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டும்.
 
நாவலின் தலைப்பான ‘வசந்தத்தைத் தேடி’ என்பது குறியீடு தானே தவிர, அதனுடைய உள்ளீடாக இருப்பது இந்திய மானுடத்தின் விடுதலையைத் தேடுவதுதான்.” என்கிறார் சாலமன்.

நாவல்: வசந்தத்தைத் தேடி                                                                                                     
ஆசிரியர்: சாலமன்                                                                                                                    
பதிப்பகம்: சிந்தன் புக்ஸ்                                                                                                       
விலை: ரூ.220

 

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...