அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 5 - யாத்திரை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   20 , 2021  17:04:36 IST


Andhimazhai Image

தான் எழுதிய  'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் ஜோடி குரூஸ். நெய்தல் நிலத்தின் பறந்து விரிந்த வாழ்வை, பல்வேறு கோணங்களில் தன் எழுத்தின் வழியே அழுத்தமாகப் பதிவு செய்துவருபவர். இவர் புதிதாக எழுதியுள்ள ‘யாத்திரை’ நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது.

ஜோ டி குரூஸிடம் நாவலின் பின்னணி பற்றிப் பேசினோம்.

 “நான் ஏன் எழுத வந்தேன் என்றால்? ஒரு மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், நெய்தல் நிலத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் தான். நெய்தல் வாழ்க்கையை யாராவது எழுதமாட்டார்களா என்று நீண்ட நாள் காத்திருந்தேன். யாரும் அப்படியான படைப்புகளை எழுத முன்வரவில்லை.

 
நாமே ஒரு நாவல் எழுதலாம் என முடிவெடுத்து எழுதிய நாவல் தான் ’ஆழி சூழ் உலகு’. கட்டுமரத்தை வைத்து தொழில் செய்யும் ஒரு கடற்கரை கிராமத்தின் கதை அது.

 
‘ஆழ் சூழ் உலகு’க்குக் கிடைத்த வரவேற்பு என்னை அடுத்த நாவல் எழுத தூண்டியது. பாய்மரக் கப்பலை வைத்து அடுத்து எழுதிய நாவல் தான் ‘கொற்கை’. இந்த நாவலை எழுதுவதற்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன.

 
வணிக கப்பலில் சாதாரண வேலைப் பார்க்கக் கூடிய ஒருவன், நகரத்தில் வாழ நேரும்போது அவனுக்கு என்னென்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதை வைத்து எழுதிய நாவல் ‘அஸ்தினாபுரம்’. இது என்னுடைய மூன்றாவது நாவல்.


அஸ்தினாபுரம் வெளிவந்த பிறகு இனி எழுதவேண்டாம் என முடிவெடுத்தேன்.
புது நாவல் வரிசை: 5 - யாத்திரை
 
கொரோனா தொடங்கியதும், சந்தர்ப்ப சூழலால் ராமேஸ்வரத்தில் உள்ள அக்கா மடம் என்ற ஊரில் தங்கவேண்டியிருந்தது. ஏற்கனவே, அங்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்ததால், குடில் ஒன்று கட்டினேன். அங்கு நல்ல ஊத்து தண்ணீர் கிடைத்தால் ஒரு ஒன்றரை வருடம் அங்கேயே தங்கி விவசாயம் செய்தேன். என்னுடன் பெரியவர் ஒருவர் மட்டுமே தங்கியிருந்தார்.

அங்குத் தனிமையில் இருக்க நேர்ந்ததால், கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். பழைய நினைவுகள், பல்வேறு யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

நாம் ஏன் இந்த நிலத்தில் பிறந்தோம்?

நாம் ஏன் இந்த நம்பிக்கைக்குள் (கிறிஸ்துவம்) வந்தோம்?

ஏன் இந்த நம்பிக்கைக்குள் கொண்டுவரப்பட்டோம்? அதற்கான காரணம் என்ன?

நாம் வளரவளர அந்த நம்பிக்கைக்குள் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது? இந்த நம்பிக்கைக்குக் காரணமான ஏசு கிறிஸ்து யார்? அவர் கடவுளா? கடவுளின் மகனா?

மனிதர்கள் ஏசு மீது ஏன் நிறையக் கட்டுமானங்களை ஏற்றினார்கள்? அந்த கட்டுமானங்கள் கற்பனையானவையா?

அவர் ஒரு வரலாற்று மனிதர் தானே! மாட்டு தொழுவத்தில் பிறந்தவரைக் கடவுள் என்கிறார்களே! அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் சொல்லவில்லையே! பிரபஞ்சத்தை நோக்கி பிதாவே என்று தானே அழைக்கிறார்! சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த போராளி தானே அவர்! இப்படிப்பட்டவரை ஏன் தேவகுமாரன் என அழைத்தார்கள்?

 
எல்லாவற்றையும் நேசிக்கிற பண்பை தானே ஏசு தன்னுடைய வாழ்க்கையில் கூறினார்! ஏசு தன்னை வணங்கவா சொன்னார்? என் பின் செல்லுங்கள் என்று தானே சொன்னார். குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டு சமூக அக்கறையோடு இரு என்பது தானே அதற்குப் பொருள்.

 
இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு சிறிய கதையொன்று தோன்றியது, அப்படி எழுதி முடித்தது தான் யாத்திரை நாவல்.

 
ஒரு கடுமையான ஆன்மீகத்தேடல் தான் யாத்திரை நாவல். நாவலில் வரும் சின்ன பையனுக்கு கடவுள் என்றால் யார் என்று தெரியாது. அவனுக்கு எப்படி கடவுள் நம்பிக்கை வருகிறது. அந்த நம்பிக்கையை யார் கொடுத்தது? என்பது போன்ற சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்னோர்களைப் புனிதர்களாகவும் ஏசுவை தன்னைப் போன்ற எளிய மனிதனாகவும் சர்வேசுவரனாகவும் அவன் இனங்காண்கிறான்.

 
பெரிய கொந்தளிப்புடன் இருந்த எனக்கு யாத்திரையை எழுதி முடித்தவுடன் ஒரு மனநிறைவு இருந்தது. 150 பக்கம் கொண்ட மிகச் சிறிய நாவல் தான் இது.” என்று சொல்லி முடித்தார் ஜோடி குரூஸ்.


நாவல்: யாத்திரை
ஆசிரியர்: ஜோடி குரூஸ்.
பதிப்பகம்: காலச்சுவடு
விலை: ரூ.175

-தா.பிரகாஷ்
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...