அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 11 - திருவிழா

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   28 , 2021  20:41:58 IST


Andhimazhai Image

அபுதாபியில் வசிக்கும் பரிவை சே.குமார் படைப்பிலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். அவர் புதிதாக எழுதியுள்ள ‘திருவிழா’ கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ளது. இது அவருடைய இரண்டாவது நாவல்.


“என்னுடைய ‘எதிர்சேவை’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த போது, அதில் இடம்பெற்றிருந்த ‘எதிர்சேவை’ என்ற சிறுகதையை நாவலாக எழுதும்படி மருத்துவர் சில்வியா பிளாத் கேட்டுக்கொண்டார். அதுதான் ‘திருவிழா’ நாவல் எழுதுவதற்கான முதல் விதை.” என்கிறார் பரிவை சே.குமார்.


“கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு அக்கிராமம் நிறையக் கதைகளை அவனுக்குக் கொடுத்திருக்கும். அப்படியான கதைகளில் ஒன்று தான் ‘திருவிழா’ நாவல்.


சிவகங்கை மாவட்டம் தான் நாவலில் கதைக்களம் என்றாலும், ‘எதிர்சேவை’ என்ற நிகழ்வை மையப்படுத்தி முழு நாவலையும் எழுதியிருக்கிறேன்.


பிரிந்த குடும்பங்கள்; அவர்களின் வாழ்க்கை, கிராமத்தில் நடக்கும் திருவிழா என பல்வேறு விஷயங்களை நாவலில் பேசியிருக்கிறேன்.

நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எங்கள் ஊரில் நான் பார்த்து வளர்ந்த, இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வெள்ளந்தி மனிதர்களின் குணநலன்களையே ஒத்திருப்பார்கள். இவர்கள் எல்லாருமே அரிதாரம் பூசாதவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவர்கள் என்றாலும் அண்ணன்-தம்பி, அங்காளி-பங்காளி பகைகளைத் தூக்கிச் சுமப்பவர்கள்தான். அடி பைப்பில் தண்ணீர் அடிக்கும்போது லேசாகச் சிதறும் தண்ணீரால் கூட உறவுகளை முறித்துக் கொள்ளும் மனுஷிகளை பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவர்களை என்னுடைய கற்பனைக் கதாபாத்திரங்களின் குணத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

நாவலின் நீளம் கருதி சிலவற்றை குறைத்துள்ளோம். இருப்பினும் நாவலின் பக்கங்கள் கூடுதலாகவே இருக்கிறது. கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடாக சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் ‘திருவிழா’  கண்டிப்பாக வாசகர்களைக் கவரும்”என்கிறார் ‘பரிவை’ சே.குமார்.

நாவல்: திருவிழா
ஆசிரியர்: பரிவை சே.குமார்
பதிப்பகம்: கலக்கல் ட்ரீம்ஸ்
விலை: ரூ.600

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...