செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Posted : வியாழக்கிழமை, நவம்பர் 26 , 2020 22:44:42 IST
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு விகிதம் வாரத்திற்கு 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள நகரங்களில், கட்டுப்படுத்தப்பட்ட வேலை நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் வீடு வீடாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், கொரோனா பாதித்தவரின் தொடர்புகளை 72 மணிநேரத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. உள்ளூர் அளவிலான ஊரடங்கை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமல்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அமலாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|