???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா: உலகைக் காப்பாற்றுவாரா கிறுக்கு புரபஸர்? -புதிய ஆய்வு வெளியீடு

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   10 , 2020  06:24:02 IST


Andhimazhai Image
 
மலேரியாவைக் குணப்படுத்தும் மருந்து கொரோனா வைரசுக்கும் பலனளிக்கிறது என்று முதலில் சொன்னவர் பிரெஞ்சு மருத்துவர் பேராசிரியர் டிடியர் ரவோல்ட். இவர் சொன்னதை வைத்துத்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மலேரியா மருந்தைப் பயன்படுத்தவேண்டும் என்று அதிரடியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் வெறும் 80 நோயாளிகளை வைத்துத்தான் ரவோல்ட் தன் முதல் ஆய்வு முடிவை வெளியிட்டார். அது சந்தேகத்துக்குரியது என்று உலக மருத்துவர்கள் பலர் சொன்னார்கள். ஆனால் பல நாடுகள் இதை ஏற்றுக்கொண்டன. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக ரவோல்ட் 1061 கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொண்ட மலேரியா மருந்து சிகிச்சையின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளார்.
 
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் - அசித்ரோமைசின் இரண்டும் கொடுத்து செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் முடிவுகள்:
 
பத்து நாட்கள் கழித்து செய்யப்பட்ட ஆய்வு முடிவில் 973 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது 91.7% ஆகும்.
 
இதய பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.
 
46 நோயாளிகளுக்கு  சரியான குணம் ஏற்படவில்லை. அவர்கள் ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
5 பேர் மரணம் அடைந்தனர். இவர்களின் வயது 74-95.
இன்னும் 31 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
“இந்த சிகிச்சை, நோய்த்தொற்று கண்டுபிடிக்கவுடன் தொடங்கினால் பாதுகாப்பாகவும் குணமளிக்கக்கூடியதாகவும் உள்ளது. 0.5% மரணங்களே ஏற்படுகின்றன, அதுவும் வயதான நோயாளிகளிடம். நோய் முற்றுவதைக் குறைத்து வைரஸ் பளுவைக் குறைக்கிறது” என்று இந்த சிகிச்சை மேற்கொண்ட ரவோல்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு கூறுகிறது.
 
ரவோல்ட் கொஞ்சம் அதிரடியானவர்; கிறுக்குப் பிடித்த புரபஸர் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் இன்று இவரது மருந்துதான் உலகைக் காப்பாற்றவேண்டும்! 
 
 இவரை நேற்று பிரெஞ்சு அதிபர் கேமரூன் மக்ரான் நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...