அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   02 , 2022  10:06:49 IST

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தொடங்கினார். நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமி என்ற பகுதியில் சசி தரூர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி  செய்தியாளர்களிடம் சந்தித்தார்.
 
அப்போது சசி தரூர் பேசுகையில், "நான் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கியுள்ளேன். கட்சியின் பல தொண்டர்கள் மாற்றத்தை விரும்பி என்னை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினார்கள். நான் இளைய தலைமுறையின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன். நான் மூத்த தலைவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் இது இளைஞர்களின் பேச்சை கேட்க வேண்டிய நேரமாகும். கட்சியின் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவந்து கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
 
கார்கே போன்ற மூத்த தலைவருக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு கிடைக்கலாம். ஆனால், எனக்கு பல மாநிலங்களில் தொண்டர்களின் ஆதரவு உள்ளது. நான் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய மூவரையும் சந்தித்தேன். அவர்கள் தேர்தல் நியாமான முறையில் நடக்கவே விரும்புகிறார்கள். புதிதாக தேர்வாகபோகும் காங்கிரஸ் தலைவர் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக இருக்கமாட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வியூகம் அமைத்து பாஜகவை எதிர்க்க வேண்டும்" என்றார்.
 
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. சசி தரூரும், மல்லகார்ஜுன கார்கேவும் போட்டியாளர்களாக களமிறங்கும் நிலையில், சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு கார்கே பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கார்கேவுக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது. கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...