???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்புக் கட்டுரை: தமிழகக் காவல்துறையின் மாவுக்கட்டுப் பிரிவு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   26 , 2019  05:23:44 IST


Andhimazhai Image
நம் காலத்தில் நீதியைபோல
வழுவழுப்பானது வேறு எதுவும் இல்லை
நாம் எந்த நேரம்
அதில் வழுக்கி விழுந்து விடுவோம் என
அவ்வளவு பயத்துடன்
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறோம்
வழுக்குகிறது
அவ்வளவு பயங்கரமாக
 -மனுஷ்ய புத்திரன்
 
 
சமீப காலமாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து வலது கையை உடைத்துக்கொள்ளும் காட்சியைக் காணமுடிகிறது. பொதுப் புத்திக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள், திருட்டுகளில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள், போலீஸாருடன் மோதலில் ஈடுபடுகிறவர்கள், இப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர் இருவர் என பலர் கையில் மாவுக்கட்டுடன் காட்சி தருகின்றனர்.
பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாக போலீசால் வெளியிடப்படும் புகைப்படங்களை வைத்து, அதற்கு ஆதரவாக நகைச்சுவையாக கருத்து கூறுபவர்கள் ஒருபுறம் இருக்க, இந்த செயல்பாட்டின் பின்னணியில் இருக்கும் சட்டமீறலில் ஈடுபடும் காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்படவேண்டும் என்று அந்திமழையிடம் பேசும்போது கூறுகிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ். 
 
 
“இப்போது மாணவர்கள் தாக்கப்பட்டதால் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த விவகாரம் வெளியே தெரிந்திருக்கிறது. ஆனால், வெளியுலகுக்கு தெரியாமல் காவல்துறையினரின் பல்வேறு அத்துமீறல்கள், சித்திரவதைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்பாவி பழங்குடியின மக்கள், விளிம்புநிலை மக்களை பொய்வழக்கில் சிக்கவைத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறையினருக்கு குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. இது வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று. கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் நீதிமன்றத்தில்தான் ஒப்படைக்கவேண்டும். ஆனால், இத்தகைய செயலில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுத்து, அவர்களை பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.
 
 
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “காவல்துறை திட்டமிட்டு இவ்வாறு வன்முறையில் ஈடுபடுகிறது. நாட்டின் ஆகப்பெரும் வன்முறை அமைப்பாக காவல்துறை மாறிவருகிறது. அது நாளை எந்தவொரு அப்பாவியின் மீதும், அல்லது நியாயமான காரணங்களுக்காக போராடுகிறவர்களின் மீதும் இதுபோன்ற வன்முறையை பிரயோகிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 90 'ரூட் தல'-கள் கணக்கெடுப்பு என்று வருகின்ற செய்தி மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கும். வன்முறையில் ஈடுபடாமல்கல்வியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துவதும் மனமாற்றத்தை உருவாக்குவதுமே சரியாகும்.” என்கிறார்.
 
 
“விஜய் மல்லையா போலீஸிடம் பிடிபட்டால் இப்படித்தான் செய்வார்களா? செல்வாக்குமிக்க மனிதரின் மகன் மதுபோதையில் போலீஸிடம் சிக்கினால் கைகளை உடைத்து அனுப்புவார்களா? சட்டம் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்கவேண்டும்,” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னிஅரசு.
 
 
“குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை நல்வழிப்படுத்த பல்வேறு வழிகள் இருக்கின்றன. மாணவர்களுக்கு இதுகுறித்த சிறப்பு வகுப்புகளை நடத்தலாம், அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளை ஆராயலாம். மாணவர்கள் கையில் ஆயுதங்களுடன் புழங்குவதையும், மோதிக்கொள்வதையும் நாம் ஆதரிக்கவில்லை. அதேநேரம் மாணவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் புழங்கும் அளவுக்கு இங்கு சட்டம்ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆயுதங்கள் கிடைப்பதை தடை செய்ய உரிய நடவடிக்கை இல்லை. அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான பிரிவுகள் காவல்துறையில் உள்ளன. எனவே, குற்றத்தில் ஈடுபடுவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நெறிமுறைகளுக்கு உட்படுத்துவதுதான் காவல்துறையின் பணியேயன்றி, இவ்வாறு சித்திரவதை செய்வதல்ல. இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது,’’ எனச் சொல்கிறார் அவர்.
 
 
“பொருளாதார, சமூக நிலையில் நலிவடைந்தவர்கள் தான் காவல்துறையின் இந்த வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள், சிலை திருடியதாக கைது செய்யப்பட்டவர்கள் போன்ற உயர்நிலையில் இருப்பவர்கள் இவ்வாறு பாத்ரூம் வழுக்கவில்லை. காவல்துறையின் இந்த வெளிப்படையான செயல் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று. இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவது மூலம் காவல்துறையினர் ஒரு மறைமுகமான செய்தியை சமூகத்துக்கு சொல்கின்றனர்,” என்று கருத்துச் சொல்லும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன், “இதில் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை வெளியே சொல்லாமல் இருப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழல் இல்லாமல் போகிறது. போலீஸ் காவலிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகளிடம், காவல்துறையினர் தாக்கினார்களா என கேட்க வேண்டியது மாஜிஸ்ட்ரேட்டின் கடமை. ஆனால், அப்படி கேட்டாலும் தாக்கப்பட்ட குற்றவாளிகள் உண்மையை கூறமாட்டார்கள். ஏனெனில், மீண்டும் காவல்துறையினரை அணுகவேண்டிய சூழல் ஏற்படும்போது பிரச்சனைக்குள்ளாக்குவார்கள், பொய்வழக்கில் சிக்கவைப்பார்கள் என அஞ்சுவார்கள். எனினும், இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் உண்மையை சொல்லாவிட்டாலும், தாமாக முன்வந்து இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கூடிய அதிகாரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு உள்ளது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூ–மோட்டோ) இந்த பிரச்சனையில் தலையிடமுடியும், மாநில மனித உரிமைகள் ஆணையம் இதில் கவனம் செலுத்தலாம். ஆனால் இவை எதுவும் நடப்பதில்லை என்பதுதான் இதில் சிக்கல். மனித உரிமை ஆர்வலர்களால் இதில் முழுமையாக இயங்க முடியாததற்கு காரணம், பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை வெளிப்படையாக சொல்லாததுதான்,” என்று பிரச்னையின் இன்னொரு கோணத்தைத்தெரிவிக்கிறார்.
 

காவல்துறை வட்டாரங்களில் இதுபற்றிக்கேட்டபோது,” இது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பொதுமக்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள்.  எங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் இதைப் புரிந்துகொள்ள முடியும்,” என்று மட்டும் தெரிவிக்கிறார்கள்.
 

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிகாரில் பகல்பூர் என்ற இடத்தில் காவல்துறை அதிகாரிகள் கிரிமினல்களின் கண்களின் ஆசிட் ஊற்றி அவர்களை நிரந்தரக் குருடாக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். இந்த பிரச்னை வெளியே தெரிந்து நாடு முழுக்க பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தழுவி கங்காஜல் என்ற படம் வெளியானதுகூட நினைவிருக்கலாம்.இப்போது தமிழ்நாட்டில் பாத்ரூம்களில் குற்றவாளிகள் அதுவும் எளிய பின்னணியைக் கொண்டவர்கள் மட்டும் வழுக்கி விழுந்துகொண்டிருக்கிறார்கள்.
 
 
-வசந்தன்

 


English Summary
New atrocity of tn police

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...