???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  22:10:15 IST

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவர், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவரின் தந்தை வெங்கடேசன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும்

மாணவருக்கு பதிலாக யார் தேர்வெழுதினார் என்பதை கூற மறுப்பதாகவும் முறையிட்டார். எனவே, மாணவர் மற்றும் வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் கடுமையாக வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி, வசூல்ராஜா திரைப்பட பாணியில் நீட் ஆள்மாறாட்ட சம்பவம் நடத்திருப்பதாகக் கூறினார். ஒரு நல்ல மருத்துவர் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு தந்தையாக வெங்கடேசன் தனது மகனின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டதாகவும் கூறினார். மாணவரின் வயதை கருதி அவரை நிபந்தனை ஜாமினில் விடுவிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி.

மதுரையில் மாணவர் தங்கியிருந்து நாள்தோறும் சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேவேளையில் வெங்கடேசனின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...