???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   16 , 2019  23:27:41 IST

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2017-ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவ சேர்க்கைச் சட்டம், தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவ சேர்க்கைச் சட்டம் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தநிலையில், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அந்த மாநிலங்களே தங்களது சொந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று இருக்கும்போது, இதுபோன்ற நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வாங்கித் தரவேண்டும் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கு, ஒரு வாரத்துக்கு முன்னர் நீதிபதிகள், மணிகுமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டது’ என்று விளக்கமளித்தார். அதனையடுத்து, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நாள்கள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, செவ்வாய்கிழமை மத்திய உள்துறை துணைச் செயலாளர் ராஜீவ் எஸ்.வைத்யா சார்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தது. அந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

அந்த மசோதாக்களை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்தார். நிறுத்திவைக்கப்பட்ட மசோதா செப்டம்பர் 22-ம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது’ என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...