அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   15 , 2021  16:42:48 IST


Andhimazhai Image

திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? -கேட்டே விட்டார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் நீட் தேர்வும் நடத்தி மாணவர்கள் எழுதி விட்டனர். மூன்று மாணவர்கள் இந்த தேர்வு அச்சுறுத்தலால் மடிந்தும் விட்டனர்.

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நீட் தேர்வை ஒழிப்போம் என்பதையும் திமுக அளித்திருப்பதால், அது என்னவாயிற்று என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இப்போதைக்கு பாஜக தவிர பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கோரும் சட்டத்தை தமிழக சட்டசபையில் ஆளும் திமுக கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இது செயல்பாட்டுக்கு வரும்.

இதற்கு முன்னரும் அதிமுக ஆட்சியின் போது நீட் விலக்கு கோரும் சட் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதல் பெறமுடியாமல் போயிருக்கிறது.

திமுகவின் சட்டத்தில் என்ன புதுமை? நீதியரசர் ஏகே ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளின் பேரில் இந்த சட்ட மசோதாவை கொண்டுவந்திருப்பதாக சொல்வதுதான் புதிது.

பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுகவால் பெற முடியாத குடியரசுத் தலைவரின் ஒப்புதலை எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக பெற்றுவிட முடியுமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

”தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக்  கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும்,” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

என்றைக்கு கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்குப் போனதோ அன்றே பறிபோன உரிமை இது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏவின் அறக்கட்டளை சார்பாக வழக்குத் தொடரப்பட்டு, இதுபற்றி நீதிமன்றமும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

2006-இல் திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்  அங்கம் வகித்தபோது தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றி அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக இருந்த அதிமுக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முயன்றபோது உயர்நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது பழைய கதை. இப்போது தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் விலக்கு பெறவேண்டும் என்றால் மத்தியில் வலுவான அரசியல் மற்றும் நீதித்துறை ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டே இதை மு.க. ஸ்டாலின் அரசு சாதிக்குமானால் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும்.

திமுகவின் சட்ட மூளைகளும் அரசியல் புலிகளும் முழு வேகத்தில் இயங்கவேண்டிய நேரம் இது.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...