???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் உதவிக்கரம்: ஒன்றிணையும் தமிழ் சமூகம்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   04 , 2018  04:36:52 IST


Andhimazhai Image
நீட் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதமே இங்கு இன்னும் முடியவில்லை. கடந்த ஆண்டு அனிதாவைப் பறிகொடுத்த சோகமே தீரவில்லை. அதற்குள் வெளிமாநில மையங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கி கதறவைத்திருக்கிறது நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ அமைப்பு. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆங்கிலத்தில் போட்டிருக்கும் ட்வீட் இப்படிச் சொல்கிறது: “ நீட் வேண்டாம் என்று குரல்கொடுத்தது போய் தமிழ்நாட்டிலேயே அதை நடத்துங்கள் என்று குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள்... என்ன ஒரு திட்டம்?”
 
 
திட்டமிட்டுத்தான் பல மாணவர்களுக்கு கேரளத்திலும் ராஜஸ்தானிலும் தேர்வு மையம் ஒதுக்கினார்களா அல்லது அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பித்ததால் கணினி கண்ணை மூடிக்கொண்டு வெளிமாநிலங்களில் இடம் ஒதுக்கிவிட்டதா என்ற கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்க, இன்னும் தேர்வுக்கு இரண்டே நாள் இருக்கும் இச்சமயத்தில் தமிழகமே அரசை நம்பாமல் தன் மாணவச் செல்வங்களுக்கு உதவிக்கரம் நீட்ட எழுந்திருக்கிறது. 
 
 
இணைய தளங்கள், சமூக வலைதளங்கள் முழுக்க, யாருக்கு உதவி வேண்டும்? எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் உதவி செய்கிறோம் என்கிற அறிவிப்புகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம் சார்பில் எண்கள் கொடுக்கப்பட்டு இங்கே தேர்வு எழுத வருகிறவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று எழுந்தது முதல் அறிவுப்பு. இதைத்தொடர்ந்து பிரபலங்கள் மட்டுமல்லாது, வசதியும் வாய்ப்பும் கொண்ட அமைப்புகள் எல்லாம் உதவிக்கரத்துடன் எழுந்திருப்பதைக் காணும்போது, ’நீ சைபீரியாவுக்குக் கூட எங்கள் மாணவர்களை அனுப்பு, அங்கும்  வெற்றிகரமாக எம் மாணவரை தேர்வு எழுத வைப்போம்’ என்றுதான் தமிழினம் முடிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழக அரசு சார்பில் நீட் புனிதப்பயணம் மேற்கொள்ள 1000 ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளத்துக்கு சிறப்புப் பேருந்துகள் தயாராகின்றன. மாநிலம் முழுக்க பல இடங்களில் உறைவிட முகாம்கள் அமைத்து தமிழக அரசுப்பள்ளியில் சிறந்த மாணவர்களைத் தங்க வைத்து சிறப்புப் பயிற்சி அளித்து போர்க்காலம் போல் நீட் அரக்கனை எதிர்கொள்ள அவர்களைத் தயாரித்த அரசு, கடைசி நேரத்தில் இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் நீட் எழுதுகிறார்கள் என்றால் அவர்களில் சில ஆயிரம் பேருக்கு இந்த வெளிமாநில மையங்கள் ஒதுக்குதல் நிகழ்ந்துள்ளது. இதை மத்தியில் இருக்கும் தேர்வு அமைப்பு நினைத்திருந்தால் சரி செய்திருக்கலாம்! அதை வலியுறுத்திக் கேட்கவேண்டியவர்களும் உறங்கிவிட்டார்கள்.
 
 
இனி ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்தச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. இது புதிது அல்ல. சென்னை பெருவெள்ளத்தின் போது இந்தச் சமூகம்தான் கைகொடுத்தது. ’தானே’ புயலின்போது இந்தச் சமூகம்தான் கைகொடுத்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது சமூகமே திரண்டதால்தான் அதை வென்றது. அரசுகள் புறந்தள்ளப்பட்டு சமூகமே தனக்கான உதவியை தனிநபர்கள் மூலம் செய்துகொள்வதுதான் இன்றைய நிலை! அத்துடன் கல்வி என்று வரும்போது அதைத்தான் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு முன்வரத்துடிக்கும் சமூகமாக தமிழ்சமூகம் இருப்பதால்தான் இந்த நீட் தேர்வுச் சிக்கலை புறமுதுகு காட்டாமல் நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொள்கிறது. நெருக்கடிகளை உருவாக்கி, தமிழர்களை ஒரு சமூகமாக சாதி மத அடையாளம் தாண்டி ஒருங்கிணைய வைக்கும் அனைவருக்கும் நன்றியைத்தான் சொல்லவேண்டும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...