![]() |
நீரஜ் சோப்ரா: தங்கக் கரம்!Posted : திங்கட்கிழமை, ஆகஸ்ட் 09 , 2021 18:47:09 IST
பானிப்பட்டைச் சேர்ந்த நீரஜ் என்ற சிறுவன் எண்பது கிலோ எடையை தன் 13 வயதிலேயே தொட்டுவிட்டான். இவ்வளவு குண்டாக இருக்கிறானே என ஊர் கேலி பேச, ஜிம்மில் சேர்ந்தான். அங்கே இருந்த சிவாஜி மைதானத்துக்கு வேடிக்கை பார்க்கவும் போனான். மாங்கு மாங்கென்று ஓடி ஒருவர் ஈட்டி எறிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அவர் ஹரியானாவுக்காக ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் ஜெய்வீர் என்ற தடகள வீரர். அவர் இந்தப் பையனை ஒரு நாள் கூப்பிட்டு, ஈட்டியைக் கையில் கொடுத்து எறியச் சொன்னார். நீரஜ் சாதாரணமாக 40 மீட்டர் எறிந்தான். எந்தப் பயிற்சியும் இல்லாத நிலையில் இது ஆச்சரியப் படுத்தும் தூரம். ஜெய்வீர், நீரஜை தினமும் வரசொல்லி பயிற்சி கொடுத்தார்.
இந்த புதிய விளையாட்டில் நீரஜ் ஈடுபடுவது அவனது குடும்பத்துக்கே தெரியாது. ஒரு பெரிய போட்டியில் வென்று அது செய்தியாக வெளியான போதுதான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
இப்படித் தொடங்கிய கதைதான் இன்று இந்தியாவின் நூறாண்டு கனவை நனவாக்கி தடகளத்தில் தங்கப்பதக்கம் வாங்கித் தந்துள்ளது. ஒலிம்பிக்கில் நீரஜ் 87.58 மீட்டர் தூரம் எறிந்துள்ளார். முன்னதாக காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த இவர், 88.07 மீட்டர் தூரம் எறிந்து தன் அதிகபட்ச தூரத்தை எட்டி இருந்தார். அந்த தூரத்தை எட்டாதபோதும் கூட, இந்த போட்டியில் தங்கத்தை வெல்ல முடிந்தது.
ஆனால் நீரஜுக்கு எந்த சிரமமும் இல்லை. முதல் தடவையே ஈட்டியை 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப்போட்டிக்குத் தேர்வாகி விட்டார்.
இறுதிச் சுற்றில் வெட்டர் தான் மார்தட்டிக்கொண்டபடி 90 மீட்டரைத் தாண்டி வீச முடியவில்லை. நீரஜ் தங்கப்பதக்கத்தை அமைதியுடன் தட்டிச் சென்று, இந்தியர்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றி வரலாற்றில் இடம் பெற்றார்.
|
|