???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசியல் சாசனத்தை அம்பேத்கர்தான் எழுதினாரா?

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   28 , 2019  04:06:36 IST


Andhimazhai Image

அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியது அம்பேத்கரா? இல்லையா? என்ற கேள்வியால் சூடானது  நீலம் பண்பாட்டு மையம் நடத்திய  இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம். சேத்துபட்டு,  முக்தா கார்டனில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வு.

 

இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது பேசிய அவர் ‘டாக்டர் அம்பேத்கர் தொடர்பாக நிகழ்ச்சியை நான் நடத்துவதால், அம்பேத்கரை ஒரு சாராரின் தலைவராக மட்டும் பார்க்கும் மனப்போக்கு இங்கே இருக்கிறது. அம்பேத்கர் எல்லாருக்குமான தலைவர் என்பதை அனைவரும் உணர  வேண்டும். சுதந்திரம் அடைவதற்கு முன்பு  அம்பேத்கரை பலர்  ஏற்றுக்கொள்ளவில்லை , அவர் சட்டம் இயற்றி முடிப்பதற்குள் பலரால்  விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

 

வரலாற்றில் காந்தி அடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கிறது. அதுபோலவே காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்குகிறது. ஆனால் அம்பேத்கர் ஒரு தவிர்க்க முடியாத நபரக இருந்திருக்கிறார். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதே அவரின் ஒப்பற்ற திறமைக்கு சான்று‘ என்றார்.

 

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் யாக்கன் “ இளையதலைமுறையிடம்  சாதி, மத  வகுப்புவாத உணர்வுகள் வேகமாக வளர்தெடுக்கப்படுகிறது. இந்த வகுப்புவாத உணர்வுகள் அவர்களுக்கே ஆபத்தானவை என்று அவர்களுக்கு புரியவில்லை. இந்த வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுக்க அவர்களுக்கு ஆழமான புரிதல் ஏற்பட வேண்டும். அந்த புரிதலை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்துகொண்டால்தான் பெற முடியும். இந்திய அரசியல் சட்டம் தன்னியல்பாகவே சாதி, மத வகுப்புவாதத்திற்கு எதிரானதாக இருக்கிறது. சட்டத்தை பற்றி பேசினாலே ‘என்ன சட்டம் பேசுகிறாயா’ என்று கேட்பார்கள். இந்த உணர்வு  ஒடுக்கப்பட்ட மக்கள்  மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கிறது. சட்டம் வழங்கும் உரிமைகளை எவ்வளவு எளிதாக ஒரு அதிகாரியால் தடுத்து நிறுத்த முடிகிறது. ’சட்டம் பேசுகிறாயா’ என்ற வார்த்தையை கேட்டவுடனே நாம் நடுங்கி விடுகிறோம். சட்டம் பற்றி பேசுவது ஒரு குற்றம் என்ற எண்ண ஓட்டம் இங்கே நிரம்பி வழிகிறது.

இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. சட்டம் என்பது நியாயத்தின் பக்கம் இருக்கிறது. இதுபோன்ற பண்புகளை சட்டத்திற்கு வழங்கியது  யார்  என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ’டாக்டர் அம்பேத்கர் சட்டத்தை எழுதவில்லை. 396 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கூடி விவாதித்து ஆலோசனை செய்துதான் சட்டத்தை உருவாகினார்கள். இதில் சட்டத்தை யார் எழுதியது என்ற கேள்விக்கே இடம் இல்லை’ என்ற கருத்தை  எழுத்தாளர் ஒருவர் முன்பு கூறியிருந்தார். இதே கருத்தை  அண்மையில் இந்து நாளிதழில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு எழுதியிருக்கிறார்.

 

நான் இந்த கருத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியது அம்பேத்கரா? இல்லையா? அரசியல் அமைப்பு சட்டத்தின் முகத்தையே மாற்றும் வேலையை ஒவ்வொரு அரசும் செய்துகொண்டிருக்கிறது.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலில் அரசியல் அமைப்பு சட்ட அவைக்குள் அம்பேத்கர்  நுழைந்தார். ஆனால் நுழைந்த பின்புதான் அவருக்கு தெரிந்தது அந்த உணர்வு கொண்ட மனிதர்கள் அவையில் எவரும்  இல்லை என்று.

 

அரசியல் அமைப்பு சட்ட அவைக்குள் அம்பேத்கர் எளிதாக நுழையவில்லை. 1946 ஜுலை 18 ஆம் தேதி அரசியல் சட்ட அமைப்பு அவைக்கான தேர்தலை இந்தியா நடத்தியது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், பட்டியலின மக்களின் சம்மேளனம்( அம்பேத்கர் தொடங்கிய கட்சி) ஆகிய கட்சிகள் போட்டியிட்டனர். அம்பேத்கர் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போழுது ஒரு எம்பி-ஐ தேர்வு செய்ய 5 சட்டமன்ற உறுப்பினர்கள்  வாக்களித்திருக்க வேண்டும்.

 

ஆனால் எந்த மாநிலங்களிலும் பட்டியலின மக்களின் சம்மேளனத்திற்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அம்பேத்கர் கையறு நிலையில் இருந்தார். ஜோகிந்தர்நாத் மண்டல்தான் அம்பேத்காரை அழைத்து வங்காளத்தில் போட்டியிடுங்கள் என்றார். அங்கே முஸ்லீம் லீக் உதவியுடன் அம்பேத்கர் வெற்றிபெற்றார். ஆனால் அம்பேத்கர் வெற்றிபெற்ற தொகுதி இந்தியா - பாகிஸ்தான் பிரிந்தபோது பாகிஸ்தானுடன் சென்றுவிட்டதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து லண்டன் சென்று கன்சர்வேட்டிவ் கட்சியுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கொடுத்த அழுத்ததின் பெயரில்தான் அரசியல் சட்ட அமைப்பு அவைக்குள் அம்பேத்கர் நுழைந்தார்,” என்று அவர் கூறினார்.  

 

இதைத்தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அஜிதா,’’அம்பேத்கர் கைப்பட எழுதிய இந்திய அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் இன்னும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை பார்த்தால் எந்த முட்டாளும்கூட அம்பேத்கர்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதினார் என்பதை சொல்ல முடியும். ஆனால் இங்கே திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது.  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதுவதற்கு அவர் 60 நாடுகளின் சட்டத்தை முழுவதுமாக படித்து அலசினார்.

 

மகளிர் உரிமைக்காக இந்துக்கள்  சட்டத்தை கொண்டு வந்ததே அம்பேத்கர்தான். அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதால் அவர் அரசியல் அமைப்பு சட்ட அவையை விட்டு வெளியேறினார்.

கணவனை இழந்த பெண்கள் அவர்கள் பிறந்த விட்டில் வாழும் உரிமை முதல் சொத்துரிமை வரை கிடைப்பதற்கு  அம்பேத்கர் வகுத்த சட்டம்தான் காரணம். 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைப்பதற்கும் அம்பேத்கர்தான் காரணம்,” என்று சொன்னார்.

 

தொடர்ந்து பேசிய விடுதலை ராஜேந்திரன் ’மண்டல் ஆணைக்குழு  உருவாக அம்பேத்கரின் சட்ட பிரிவுகள்தான் காரணம். இன்று பிற்படுத்தபட்டோருக்கான இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முக்கிய காரணமே அம்பேத்கரின் சட்டம்தான்’ என்றார். 

 

-வாசுகி

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...