???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   21 , 2019  23:01:41 IST

2017-ம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை வெளியிட்யிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 2017-ம் ஆண்டு நாடு முழுவதும் 50,07,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 5.5 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் பதிவான வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக 95,893 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆசிட் வீச்சு, அரிவாளால் வெட்டுவது போன்ற கொலைவெறி தாக்குதல் தொடர்பாக 4 லட்சத்து 94 ஆயிரம் வழக்குகளும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக 86,000 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

வீடுகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்கள் குறித்து 7,75,263 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.கொள்ளை போனதாக மதிப்பிடப்பட்ட 5,002 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களில் 1,296 கோடி ரூபாய் பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...