???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குல்தீப் நய்யார்: இதழியல் இமயம்!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2018  05:32:59 IST


Andhimazhai Imageடெல்லியில் முதுகலை இதழியல் பட்டயம் படித்துக்கொண்டிருந்தபோது குல்தீப் நய்யாரை முதல்முதலாகப் பார்த்தேன். கல்லூரியில் எங்களிடம் உரையாற்ற வந்திருந்தார். பாகிஸ்தானில் அணுகுண்டு விஞ்ஞானியான அப்துல் காதிருடன் அவர் செய்த நேர்காணல் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மிகவும் ரகசியமான சந்திப்பு. கையில் பேனா பேப்பர் எதுவும் வைத்திருக்க அனுமதி இல்லை. சொத சொத என்று நேர்காணல் போய்க்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானியர்களுக்கு அணுகுண்டு செய்யும் திறனெல்லாம் எதுவும் இல்லை என நய்யார் சீண்டியிருக்கிறார். கோபத்தில் அப்துல்காதிர் உளறிவிட்டார்: எங்களிடமும் அணுகுண்டு இருக்கிறது!

முதல்முதலாக பாகிஸ்தானின் அணுவிஞ்ஞானி எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என்று ஒப்புக்கொண்ட பேட்டி அது. டெல்லிக்குத் திரும்பி வந்து உட்கார்ந்து எழுதி உள்ளூர் பத்திரிகைகளிடம் கேட்டால் எங்களால் இதைப் போடமுடியாது..... இது ரொம்ப சர்ச்சைக்குரிய பேட்டி என்று சொல்லிவிட்டன. அதனால் அந்த பேட்டி லண்டனில் உள்ள ஒரு பத்திரிகையில் வெளியானது. எங்களிடம் அணுகுண்டு உள்ளது!- பாகிஸ்தான் விஞ்ஞானி பேட்டி என்று தலைப்பு வைக்க நினைத்த நய்யார், பிறகு அவர்களும் போடாவிட்டால் என்ன செய்வது என்று ஏதோ காமா சோமா தலைப்பை வைத்து அனுப்பி வைத்தார். அங்கே இந்த கட்டுரையைப் பார்த்த ஓர் உதவி ஆசிரியர்.. “ என்ன இந்த நய்யார் இப்படி இருக்கிறார்? எது தலைப்பு என்றே அவருக்குத் தெரியவில்லையே... அணுகுண்டு விஷயம் அல்லவா தலைப்பாக வரவேண்டும்?” என நினைத்து எங்களிடம் அணுகுண்டு உள்ளது! என தலைப்பு வைத்து வெளியிட்டுவிட்டார். மிகவும் பரபரப்பாக உலகளாவிய அளவில் பேசப்பட்ட பேட்டி என நய்யார் அதைப்பற்றி ஒரு திரைப்படம் போல் விவரித்தார். மாணவர்களாகிய நாங்கள் வாயைப் பிளந்தவாறு அமர்ந்திருந்தோம்.

 மாநிலங்களவை எம்பி, இங்கிலாந்துக்கான தூதர் என்றெல்லாம் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றிருந்த அவரை  சில ஆண்டுகள் கழித்து நான் வேலை பார்த்த பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுவதற்காக சந்திக்கப்போனேன். அது மாலை நேரம். என்னுடன் மானஸ் ரஞ்சன் என்ற புகைப்படக்காரரும் வந்தார். வசந்த் விஹாரில் நய்யாரின் வீடு. வாசலில் விசாரித்தோம். சாலையைக் கடந்தால் தெரிந்த பூங்காவில் அவர் நடைப்பயிற்சியில் இருக்கிறார் என்று தெரிந்தது. அங்கு சென்று வழி மறித்து விஷயத்தைச் சொன்னேன். வியர்க்க விறுவிறுக்க, மூச்சு வாங்க மென் ஓட்டத்திலேயே என்னுடன் பேசிய அவர்,  வீட்டுக்கு சென்று காத்திருங்கள்.. வந்துவிடுகிறேன் என்றார். நானும் மானஸும் வீட்டுக்குச் சென்றோம். உள்ளே ஏன் போவானேன் என்று காவலாளியிடம் சொல்லிவிட்டு வாசலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து அரட்டை அடித்தோம். பயிற்சி முடித்து வந்தவர், நாங்கள் வாசலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தவர் காவலாளியிடம் எங்களை ஏன் உள்ளே அமரவைக்கவில்லை என கோபித்துக்கொண்டார். ‘ இல்லை.. நாங்களே தான் வெளியே அமர்ந்தோம்..” எனச்சொல்லி அவருடன உள்ளே போனோம். புத்தங்கள் நிறைந்திருந்த ஒரு பிரம்மாண்ட அறையில் எங்களை எதிர்கொண்டார். போன விஷயத்தைப் பேசி முடித்தபின், அவரது பாகிஸ்தான் அணுவிஞ்ஞானி உரையை ரசித்துக் கேட்டது பற்றிச் சொன்னேன். கனமான மூக்குக்கண்ணாடிக்குப் பின்னால் அவரது கண்கள் பளபளத்தன. இந்த பின்னணி விஷயங்களை எல்லாம் நீங்கள் எழுத்தில் பதிவு செய்யலாமே  என்றபோது எழுதலாம் என்றிருக்கிறேன் என்று யோசனையுடன் சொன்னார். எங்கள் பத்திரிகைக்குத் தொடராக எழுதலாமே என்றபோது பார்ப்போம் எனச் சொல்லி அனுப்பி வைத்தார். அதன்பின்னர் பல மாதங்கள் கழித்து  வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது தன்னுடைய பத்திரிகைத்துறை அனுபவங்களை ஒரு தொடராக எழுத இருப்பதாகவும் நாட்டில் உள்ள பல்வேறு மாநில மொழிகளில் ஒரே நேரத்தில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் தமிழில் உங்கள் பத்திரிகையில் வெளியிடுகிறீர்களா? என்றும் கேட்டார்.

 “ஸார், இந்த தொடருக்கு ஏதாவது தலைப்பு யோசித்து வைத்திருக்கிறீர்களா?”

“இல்லை இனிமேல் தான் யோசிக்கவேண்டும்.”

என் கண் அவரது மேஜை மேல் இருந்த ஒரு பழைய நாவலின் அட்டையில் பதிந்தது. அதில் ஸ்கூப் என எழுதப்பட்டிருந்தது.

“ஸார், ஸ்கூப் என்றே வைத்துவிடலாம்...” என்றேன்.

“அட... அப்படியே வைக்கலாமே..:” என்றார். இதே தலைப்பில் அவரது தொடர் நான் பணிபுரிந்த பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. பலவாரங்கள் வெளியாகி பிறகு ஏனோ அதற்கு வாசகர்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில் நிறுத்திவிடலாம் என்று ஆசிரியர் தயக்கத்துடன் கூறினார். நான் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அவரது அழுத்தமான குரல் சலனமின்றி...” ஓ..... அப்படியா?” என்றது. பிறகு சில வாரங்கள் கழித்து அழைத்து,  “இப்போது இலங்கைப் பிரச்னை பற்றி அந்த தொடரில் வருகிறது. நீங்கள் படிக்கவேண்டுமே என்பதால் அந்த பகுதியை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன். பிரசுரத்துக்கு அல்ல ” என்றார்.


இந்திய பத்திரிகை உலகில் அவரளவுக்கு  மிகமுக்கியமான நிகழ்வுகளை நேரில் கண்டு எழுதிய பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை  எனச் சொல்லலாம்!  காந்தி சுடப்பட்டது, மௌண்ட்பாட்டன் பிரபுவுடனான அவரது பேட்டி போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. அதை விட நேரு இறந்த பின்னர் மொரார்ஜியா சாஸ்திரியா என்ற கேள்வி வந்தபோது சாஸ்திரிக்கு ஆதரவாக சூழல் திரும்ப நய்யாரும் ஒரு முக்கிய காரணம். எமர்ஜென்சி சமயத்தில் எப்போது திரும்பவும் தேர்தல் என்று கண்டுபிடித்து முதன் முதலாக எழுதியவர் குல்தீப் நய்யார். 1977 ஜனவரி மாதம் விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் என செய்தியை ஓரிடத்தில் கேள்விப்படுவார் நய்யார். ஆனால் இதை உறுதிப்படுத்த முடியாது. அதனால் மறுநாளே மிகச்சாதாரணமாக  காலையில் கமல்நாத் வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருப்பார். அப்புறம், ‘நீங்க பழைய தொகுதியில்தானே போட்டியிடப்போகிறீர்கள்? சஞ்சய் காந்திக்கு அமேதிதானே?” என்று சும்மா அடித்துவிடுவார். கமல்நாத், ‘ அட, எப்படி இதெல்லாம் உங்களுக்குத் தெரியும்?’ என்பார் ஆச்சரியத்துடன். மறுநாள் நய்யார் பணியாற்றிய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் என்று தலைப்புச் செய்தி. கோயங்காவே நம்பாமல் “ இது உண்மைதானா?” என்று கேட்டாராம்!. இரண்டு நாள் கழித்து இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டு தேர்தல் தேதியை அறிவித்தார்!

2004-ல் எனக்குத் திருமணமான சில வாரங்களில் அவரை சந்திக்கப்போயிருந்தேன். திருமண தகவலைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். ‘ ஏன் எனக்குத் தகவல் சொல்லவில்லை?’ என உரிமையுடன் கேட்டவர், வீட்டில் உள்ளவர்களை அழைத்து இனிப்பு கொண்டுவரச்சொல்லி எனக்கு  அளித்தார். அப்போது எங்கள் பத்திரிகையில் அவரது தொடர் பிரசுரம் ஆகத் தொடங்கி இருந்தது.

அப்போது குடும்ப நிலவரம் காரணமாக டெல்லியை விட்டு சென்னைக்கு பணிமாறுதலில் செல்லவிருப்பதைச் சொன்னேன். அவர் உடனே சொன்னது இன்னம் ஞாபகம் இருக்கிறது:   “டோண்ட் கோ.. டெல்லியிலேயே இருந்து விடு. இங்கிருக்கும் வாய்ப்புகள் உனக்கு வேறெங்குமே கிடைக்காது, போகவேண்டாம்!.”

அவரது ஆலோசனையில் இருந்த நிஜமான அக்கறை இன்றும் நெகிழச்செய்கிறது.

 

-அசோகன்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...