???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நயன்தாரா போட்ட குண்டு,அதிர்ச்சியில் சிம்பு குடும்பம்.

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   25 , 2013  23:29:28 IST

 சிம்பு தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புத் தடைபட்டு நிற்கிறது. இதற்கிடையில் அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டு அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். கதையைப் பற்றிக் கேட்டுக்கொண்ட நயன்தாரா, கதை ஓகே, நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால் நடிக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறார். எனவே சம்பளம் பேசும் விசயம் டி.ராஜேந்தர் கைக்குப் போனதாம். அவரிடம் என் சம்பளம் இரண்டுகோடி, அதைக்கொடுத்தால் நடிக்கத் தயார் என்று சொன்னாராம் நயன்தாரா. அதைக் கேட்டு மயக்கம் வந்துவிட்டதாம் டி.ராஜேந்தருக்கு. அதைத் தொடர்ந்து சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டு சிலர் தூதுபோக அவை எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டாராம் நயன்தாரா. அதோடு உங்களுடையது பெரிய தயாரிப்பு நிறுவனம், என்னுடைய சம்பளத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்பது சரியா,என்றும் கேள்வி கேட்டாராம்.

 

சொந்தத் தயாரிப்பில் தயாராகும் படம் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் அதற்கு சிம்பு நயன்தாரா ஜோடி சேருவது நல்வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்த டி.ராஜேந்தர், சம்பளம் இவ்வளவு என்றவுடன், வேறு நடிகையைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் சிம்புவுடன் மறுபடி நயன்தாரா ஜோடி சேருகிறார் என்று சொன்னவுடனே படத்துக்குக் கிடைத்த விளம்பரங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இப்போதே இப்படியென்றால் அவர்கள் சேர்ந்து நடிக்கும்போதும் படம் வெளியாகும்போதும் எவ்வளவு விளம்பரங்கள் கிடைக்கும் என்பதையும் நினைத்துப் பாருங்கள் நயன்தாராவுக்குக் கொடுக்கிற சம்பளத்தை விளம்பரத்துக்குச் செலவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் டி.ராஜேந்தரை சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறார்களாம்.  நடக்கவே நடக்காது என்று பலரும் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் நயன்தாராவே நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு சம்பளவிசயத்தைக் காரணமாக வைத்து அதைக்கெடுத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் சிம்புவும் இருக்கிறாராம். உள்ளுக்குள் போர் நடந்துகொண்டிருக்கிறதாம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...