???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   31 , 2020  03:07:11 IST

”’ஹே ராம்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த எனது காட்சிகள் நீக்கப்பட்டதால் மிகவும் அழுதேன்.” என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன், அனுராக் கவுசிப் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ படத்தின் மூலம் நட்சத்திர நடிகரானார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.  அப்போது அவர் , ”பல முறை நான் சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து பின் அது திரைக்கு வராமல் போனது நடந்திருக்கிறது. ‘ஹே ராம்’ திரைப்படத்தின்போது நான் கமல்ஹாசனின் இந்தி வசனப் பயிற்சியாளராக இருந்தேன். படத்தின் இயக்குநரும் அவரே என்பதால் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்தார்.

ஆனால், படத்தின் நீளம் கருதி எனது காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இதை அறிந்து நான் மிக மோசமாக அழுதேன். இதனால் எனக்குக் கோபமில்லை. கமல் போன்ற ஒரு முழுமையான கலைஞன் மீது எப்படிக் கோபம் வரும். அவர் பெயரைச் சொல்லக் கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது." என  கூறியுள்ளார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்த வந்த போது, ‘ஹே ராம்’, ‘ஆளவந்தான்’ படங்களின் இந்தி தயாரிப்பில் கமல்ஹாசனின் இந்தி வசன பயிற்சியாளராக நவாசுதீன் பணியாற்றியுள்ளார்.  



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...