???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   16 , 2020  20:56:14 IST

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு 2-வது முறையாக பதவியேற்ற போது, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானார். இதைத்தொடர்ந்து பா.ஜ.கவின் செயல்தலைவராக ஜே.பி.நட்டா கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.கவின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பா.ஜ.கவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டாவின் பெயரை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் முன்மொழிவார்கள் எனத் தெரிகிறது.

வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தவுடன், ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் 22-ம் தேதி கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக ஜே.பி.நட்டா பதவியேற்றுக் கொள்ள உள்ளதாகவும், இதனை பிரமாண்ட விழாவாக நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜே.பி. நட்டா, 1960ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி பீகார் மாநிலத்தில் பிறந்தார். பாட்னாவில் செயின்ட் சேவியர் பள்ளியில் படித்த நட்டா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றதுடன், இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...