அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தேசிய விருது: 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   23 , 2022  10:56:04 IST

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றுள்ளது.

 
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்புக்கு சாதகமான சூழல் நிலவும் மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.  திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகமாக தி லாங்கஸ்ட் கிஸ் என்ற புத்தகத்துக்கு கிடைத்துள்ளது.

 
சிறந்த தெலுங்குப் படமாக கலர் போட்டோவும், சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் சில பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  சிறந்த இசையமைப்பாளராக அல வைக்குந்தபுரமுலோ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 
சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத் பெற்றார். சிறந்த தமிழ் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது.  சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த சண்டைப் படமாக மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு படமாக ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி படம் பெற்றுள்ளது.  சிறந்த நடிகருக்கான விருதை தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் பெறுகிறார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக நஞ்சம்மா பெறுகிறார். சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிதானந்தன் கே.ஆர் பெறுகிறார். சிறந்த துணை நடிகராக அய்யப்பனும் கோஷியும் பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...