செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
காதலின் வழியாக ஆணாதிக்கத்தை, சாதியை, மதத்தை, வர்க்கத்தை, பாலின பாகுபாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படமே நட்சத்திரம் நகர்கிறது.
காதலின் வழியாக ஆணாதிக்கத்தை, சாதியை, மதத்தை, வர்க்கத்தை, பாலின பாகுபாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படமே நட்சத்திரம் நகர்கிறது. பாண்டிச்சேரியில் இயங்கும் நவீன நாடகக் குழு புதிய நாடகம் ஒன்றை இயக்க தயாராகிறது. அதில், முற்போக்கான தலித் பெண், பிற்போக்கான இடைநிலை சாதி இளைஞர், தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடி, பிரஞ்சு பெண், திருமணமாகாத நாற்பது வயதுக்காரர், ராப் பாடகர், கானா பாடகர், முஸ்லீம் நாடகக் குழு தலைவர் என பலதரப்பட்ட இளைஞர்களைக் கொண்ட குழு அது. அவர்கள் காதலை மையப்படுத்தி நாடகம் ஒன்றை உருவாக்கி, அதை அரங்கேற்றுகின்றனர். இதை சொல்லும் கதைதான் முழுப்படமும். சாதியால் நடக்கும் ஆணவக்கொலை குறித்து படம் அழுத்தமாகப் பேசினாலும், காதல் குறித்த புதியதொரு உரையாடலை நிகழ்த்த முற்பட்டிருக்கிறது. கடந்து பத்து வருடத்தில் நடந்த பல்வேறு ஆணவக்கொலைகளையும் அதற்கு பின்னால் இருந்த அரசியலையும் இயக்குநர் பா. ரஞ்சித் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். 'நான் அப்டிங்குறது நான் மட்டுமல்ல அது என்னோட சமூக அடையாளமும் சேர்த்துதான்' என்பது போன்ற வசனங்கள் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
படம் முழுவதும் ஒலிக்கும் இளையராஜா பாடல், நாடக அரங்கத்தில் இருக்கும் புத்தர் பெயின்டிங், நாட்டார் தெய்வம், பூனை போன்றவை குறியீடாக படத்தில் இடம்பெற்றுள்ளன. தெளிவான அரசியல் பார்வையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் துஷாராவின் கதாபாத்திர உருவாக்கம் கவனிக்க வைக்கிறது. காளிதாஸ் ஜெயராம் அழகான காதலனாக வந்து செல்கிறார். சாதிய எண்ணம் கொண்ட இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் கச்சிதமாக நடித்துள்ளார். குடித்துவிட்டு வம்பிழுக்கும் காட்சியில் அரங்கையே அதிர வைக்கிறார். மற்ற நடிகர்களிடமும் குறைகாணா நடிப்பு. படத்தை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் தென்மா கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற இசையைக் கலந்து கொடுத்திருக்கிறார். 'ரங்கராட்டினம்', 'காதலர்' பாடல்கள் கவனம் பெறுகிறது. கலை இயக்கம் வெகுவாக ரசிக்க வைக்கிறது கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது. படத்தில் சில இடங்களில் பிரச்சார தொனி இருப்பதும், படத்தின் நீளமுமே குறையாக சொல்லலாம். மற்றபடி, 'நட்சத்திரம் நகர்கிறது' தமிழ் சினிமாவில் நல்ல படைப்பாக முயற்சி.