அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நானே வருவேன்: திரைவிமர்சனம்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   29 , 2022  15:29:42 IST


Andhimazhai Image

குழந்தை வளர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் திரைப்படமே நானே வருவேன்.
 
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான பிரபுவும் (நல்ல தனுஷ்), கதிரும் (கெட்ட தனுஷ்) எதிரும் புதிருமான குணம் கொண்டவர்கள். சிறிய வயதிலேயே பல்வேறு இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகும் கதிர், மிக மோசமான குணம் கொண்டவனாகிறான். இரு உயிர்களும் ஒரே இடத்திலிருந்தால் ஆபத்து என ஜோசியர் கூற, கதிரை கோவிலில் விட்டுவிடுகின்றனர் பெற்றோர். அத்துடன் கதை இருபது வருடங்கள் கழித்து நடப்பதாகக் காட்டப்படுகிறது. அப்போது பிரபு அழகான மனைவி, அன்பான மகள் என சந்தோஷமாக வாழ்கிறார்.
 
மகள் சத்தியா இரவில் யாருடனோ தனியாகப் பேசுவதைக் காணும் தனுஷ் அதிர்ந்து போகிறார். மகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் வெளிப்படையாக தெரிய தன் மகள் மீது ஒரு ஆவி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.
 
அந்த ஆவியிடம் பேச முயற்சிக்கும் போது, அது ஒரு கோரிக்கை வைக்கிறது. நான் சொல்லவதை செய்தால் உன் மகளை விட்டுப் போய்விடுகிறேன் என்கிறது. ஆவி வைத்த கோரிக்கை நிறைவேற்ற செல்லும் தனுஷூக்கு ஆச்சரியமும் வியப்பும் காத்திருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா? தன் மகளை மீட்டாரா? இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
 
நாளை பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் நிலையில், இன்று நானே வருவேன் திரையரங்கிற்கு வந்திருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க, அதை நிறைவேற்றவே செய்திருக்கிறது செல்வராகவனுடைய இந்தப் படம்.
 
வழக்கமான செல்வராகவனின் கதைக்களம் தான் நானே வருவேன் என்றாலும், நேர்த்தியான திரைக்கதையால் படம் பார்க்கும் அனுபவம் அழுத்தமான மன உணர்வை ஏற்படுத்துகிறது. பால்ய வயது சூழல் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை படம் பதிவு செய்ய தவறவில்லை.
 
தன் மகளுக்கு இப்படி ஏற்பட்டுவிட்டதே! என்ற பதட்டத்தை தனுஷ் தன் அசாத்தியமான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பரிதவிப்பு நம்மை உலுக்கிவிடுகிறது. இரண்டாம் பாதி கதிர் வாழ்க்கையைப் பேசுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வை யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சரிசெய்துவிடுகிறது. “ரெண்டு ராஜா” பாடல் ஏறக்குறைய படத்தின் கதைக்கேற்றவாறு எழுதப்பட்டிருப்பது சரியாக பொருந்தியிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தின் பின்னணி இசை கதைக்கேற்றவாறு வந்திருப்பது ஆறுதல். அதேபோல், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இரவு காட்சிகளையும், அடுக்குமாடி குடியிருப்பையும் காட்டும் போது ஒருவித பதட்டம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
 
தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கின்றனர். தனுஷின் மகளாக நடித்திருப்பவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சிறுவர்களாக நடித்திருக்கும் பொடியன்களின் நடிப்பும் மெச்ச வைக்கிறது. தனுஷின் நண்பராக வந்து காமெடி செய்யும் யோகி பாபாவிற்குப் பெரிய ஸ்கோப் இல்லை. அது கதைக்கு நல்லதே.
 
‘வாழ பிழைக்க என்னவெல்லாம் செய்யனுமோ அதையெல்லாம் செய்தேன்’, ‘எனக்குள்ள இரு அரக்கன் இருக்கான், அதுக்கும் உங்களுக்கும் சம்மதமில்லை’ என வாழ்க்கையின் மீது ஏக்கம் கொண்ட கதிர் பேசும் வசனங்கள் யதார்த்தம்.
 
படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வும், கிளைமாக்ஸ் காட்சியிலிருந்த சினிமாத்தனத்தையும் தவிர்த்திருக்கலாம்.
 
தனுஷின் ‘நானே வருவேன்’ மிரட்டுகிறது என்றாலும் சோழர்களின் பொன்னியின் செல்வனை வெல்கிறதா என்று பார்ப்போம்!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...