???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'நம்ம வீட்டுப் பிள்ளை' - பாசக்கார அண்ணன்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   28 , 2019  00:55:02 IST


Andhimazhai Image
தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றப் போராடும் பாசமிகு அண்ணனின் கதை தான்  ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.
 
பாரதிராஜாவின் பெரிய குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளில், திருமணமாகி இளம் வயதிலேயே மறைந்த சமுத்திரக்கனியின் மகன் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனாவுக்கு நல்ல மகனாகவும், தங்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பொறுப்பான அண்ணனாகவும் இருக்கிறார். மற்ற பிள்ளைகளின் பெயரன் பெயர்த்திகளைவிட தகப்பன் இல்லாமல் வளர்ந்த சிவகார்த்திகேயன் மீது பாரதிராஜாவுக்கு பாசம் அதிகம்.
 
பெரியப்பா வேல ராமமூர்த்தியின் மகன் சூரியுடன் சேர்ந்து பள்ளிக்கு அருகே இருக்கும் மதுபானக்கடையை மூட மனு அளிப்பது, விவசாய நிலங்களை வீட்டு மனையாக மாற்றி விற்பதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் சிவகார்த்திகேயன். இவர்களால் தொழில் பாதிக்கப்பட்ட ஆடுகளம் நரேனின் தங்கை மகன் நட்டிக்கு மாமாவின் தொழில் முடங்க காரணமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மீது ஆத்திரம் மூள்கிறது. இதற்கிடையே ஐஸ்வர்யாவின் பிறப்பை காரணமாக சொல்லி அவரது திருமணம் தடைபடுகிறது.
 
சொந்தங்கள் ஏமாற்றியதால் தங்கையின் திருமணம் தள்ளிப்போக, சூழ்நிலையால் நட்டியை மணக்கிறார் ஐஸ்வர்யா. இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி - ஆர்.கே. சுரேஷ் ப்ளாஷ் பேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி சிவகார்த்திகேயனுக்கு தங்கை ஆனார் என்ற முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. பின்னர், தன்னை எதிரியாக கருதும் நட்டியிடம் போராடும் தங்கையின் வாழ்க்கையை சிவகார்த்திகேயன் எப்படி காப்பாற்றுகிறார், உண்மையான பாசத்தை மறுத்த பெரியப்பா, மாமாக்கள் மனம்மாறினார்களா என்பதில் படம் நிறைவுபெறுகிறது.
 
திரளான நட்சத்திரங்களால் நிரம்பிய திரைக்கதை முதல்பாதி முழுவதும் கலகலப்பாக நகர்கிறது. இடையே மாமன் மகள் அனு இமானுவல் உடனான காதல் குறும்புகள், பாடல் என சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரே ஜாலியான அனுபவம் தான். குடும்ப உறவுகளுக்குள்ளான யதார்த்தமான சிக்கல்கள், அதையும் கடந்து வெளிப்படும் பிணைப்பு போன்றவற்றை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது இப்படம்.
 
பல இடங்களில் கிண்டல் தொனிக்கும் இயல்பான வசனங்களிலேயே திரையரங்கில் சிரிப்பலை எழுகிறது. சூரியும், அவரது மகனாக வரும் சிறுவன் ஒருபக்கம் கலகலப்புக்கு வலு சேர்க்கிறார்கள். பிரசவ வலியில் துடிக்கும் பெண், காரில் சிவகார்த்தியேன் - அனு இமானுவல் காதல் சேட்டையால் கடுப்பாகி பேசும் வசனத்தின்போது திரையரங்கம் அதிர்கிறது.
 
பசங்க, மெரினா, வம்சம் போன்ற படங்களில் வெளிப்பட்ட பாண்டிராஜின் தனித்துவமான டச், இதில் குறைவதுபோல் தெரிகிறது. பல இடங்களில் பாண்டிராஜ் படமா பொன்ராம் படமா எனும் குழப்பம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. முழுமையாக கமர்ஷியல் பாதையில் திரும்பினாலும் பாண்டிராஜ் தனக்கே உரிய சாரத்தை இழக்காமல் இருப்பது நல்லது.
 
ஒரு பாடல், சில காட்சிகளில் ப்ளாஷ்பேக்கை விரைவாக சொல்லி முடித்தது ஆறுதல் அளித்தாலும், அது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிவகார்த்திகேயன் வீட்டுக்கு ஐஸ்வர்யா எப்படி வந்தார்? ஏன் அவரை உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதற்கு காரணம் மட்டும் சொல்கிறது  ப்ளாஷ்பேக்.
 
எல்லாவற்றையும் கடந்து ஆண்களின் மூர்க்கத்தனத்தால் பாதிக்கப்படும் பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகளின் ஏக்கம், குடும்ப உறவுகளுக்குள்ளான நிறைகுறைகளை செண்டிமெண்ட்டாக காட்சிப்படுத்தி ஃபேமிலி ஆடியன்ஸை வசீகரிக்கிறார் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. கடந்தசில படங்கள் தந்த சரிவிலிருந்து முன்னோக்கி செல்ல சிவகார்த்தியேனுக்கு இந்த படம் கை கொடுக்கும்.
 
- வசந்தன் 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...