![]() |
அது அப்படித்தான் - ஒளிப்பதிவாளர் நல்லுசாமிPosted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 12 , 2013 19:51:31 IST
![]() நான் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைஅடையார் பிலிம் இன்ஸ்டிட்டில் 1972-ல் சேர்ந்தேன். 1975-ல் படிப்பை முடித்தேன். ருத்ரய்யா என் வகுப்புத் தோழர். அவர் எங்கள் ஊருக்கு அருகில் தலைவாசலைச் சேர்ந்தவர். அவரது டிப்ளமோ படத்துக்கு நான்தான் காமிரா. படிப்பை முடித்த பின் டெல்லி தூர்தர்ஷனில் கொஞ்ச நாள் வேலைபார்த்தேன். பின் சென்னைக்கு திரும்பி வந்து இங்கே தூர்தர்ஷனில் சேர்ந்தேன். ருத்ரய்யாவும் அங்கே பணியாற்றினார். 78-ல் சேலத்தில் இருந்து ஒரு ப்ரொட்யூசர் வந்திருந்தார்.
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாளை படமாக எடுக்க நினைத்தோம். கமல் நடிப்பதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது. இதற்கிடையில் ருத்ரய்யாதான் அவள் அப்படித்தான் படத்துக்கான் கருவினைச் சொன்னார். சோம சுந்தேரேஷ்வர் (ராஜேஷ்வர்) என்கிற எங்கள் திரைப்படக் கல்லூரி நண்பர் அதற்கு ஒன்லைன் தயார் செய்தார். அதை அனந்துவிடம் கொடுத்தோம். திரைக்கதையை ராஜேஷ்வர் எழுத பெரும்பாலும் வசனங்களை அனந்து எழுதினார். மீதியை வண்ணநிலவன் எழுதினார்.பாடல்களையும்அவரையேஎழுதச்சொன்னோம். அவர்மறுத்துவிட்டார். அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த படாபட் ஜெயலட்சுமியை தெரிவு செய்தோம். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் கமல் பிஸியாக இருந்தார். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது தான் நாங்கள் படமெடுக்க முடியும் என்கிற நிலை. எங்களால் தேதிகளைக் கூற முடியாததால் படாபட் ஜெயலட்சுமியை நடிக்க வைக்க முடியவில்லை.
ஸ்ரீப்ரியாவை நடிக்க வைக்கலாம் என்று கமல் கூறினார். அப்போது அவரது ஆட்டுக்கார அலமேலு மிகபெரிய ஹிட். அவரே போன் செய்து ஸ்ரீப்ரியாவிடன் எங்களைக் கதைசொல்ல அனுப்பினார். நானும் ருத்ரய்யாவும் சென்றோம். அவர்ஒப்புக்கொண்டார். சம்பளம்எப்படிஎன்றோம். சொல்லிஅனுப்புகிறேன்என்றார். மேடம்ஒருலட்சரூபாய்வாங்குகிறார். இப்படத்துக்கு 30,000 ரூபாய்கொடுத்தால்போதும்என்றுதகவல்வந்தது. ஒப்புக்கொண்டோம். கமல்தான் இளையராஜாவையும் இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பலவிஷயங்களை கமல்தான் செய்தார்.
இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கிமாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.
மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.
பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்க வில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித்தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.
சோவின் தம்பி அம்பியின் பள்ளியில் முதல் இரண்டு நாட்கள் இந்த பாட்டை எடுத்தோம். அடுத்து ஸ்ரீப்ரியா படப்பிடிப்பு. அவர் முதல் நாள் சேர் கொண்டு வந்திருந்தார். ஆனால் எங்கள் படப் பிடிப்பு விதமோ வழக்கத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது. அங்கே யாருக்கும் சேர் இல்லை. அவர் புரிந்து கொண்டு மறுநாள் முதல் சேர் கொண்டு வரவில்லை. எங்களுடனே அவரும் தரையில் அமர்ந்து கொண்டார். சாப்பாடும் நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையில் ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவோம். அங்கிருந்து தான் உணவு வரும். லோ பட்ஜெட் படம். சுமாரான சாப்பாடு தான். அதைத் தான் கமல் உள்பட எல்லோரும் சாப்பிட்டார்கள்.
ரஜினி, கமல், நடிகர்கள் என்ன ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு வருகிறார்களோ அதுதான் அவர்களுக்கு அன்று ஆடை. ஆடை வடிவமைப்பாளர் என்று யாரும் இல்லை. மேக்கப்பும் இல்லை. எங்களுக்கு எப்போது என்ன எடுப்போம் என்றே தெரியாது. திடீரென்று போன்வரும். இன்னிக்கு கமல் ப்ரீயாக இருக்கிறார். எதாவது காட்சி எடுக்கலாமே என்று. உடனே மற்ற நடிகர்கள் யார் ப்ரியாக இருக்கிறார்கள் என்று பார்த்துஅவர்களைஅழைத்துஅனந்துசாரிடம்டயலாக்வாங்கி, லொகேஷன் பார்த்து படம் எடுப்போம். கமல்சார்வீடு, எங்கஅலுவலகம், ஸ்ரீபிரியா வீடு இப்படித்தான் படம் எடுத்தோம்.
நானும்சரி, ருத்ரய்யாவும் சரியாரிடமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கவில்லை. இளங்கன்று பயமறியாது என்பது போல துணிச்சலாக எடுத்தோம். நேரம் மிகவும் குறைவு. டிரைபாடில் வைத்து படம் பிடிக்க நேரம் ஆகும் என்பதால் பல காட்சிகளை நான் காமிராவை கையில் வைத்தே எடுத்தேன். நேரம் சேமிப்பதற்காக கட் பண்ணி எடுக்க வேண்டிய பல சீன்களை ஒரே ஷாட்டில் எடுத்தோம். ஸ்ரீப்ரியா, கமல் இருவருமே ரீடேக்கே போகமாட்டார்கள். ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்து விடுவார்கள். மொத்த படமுமே 27000 அடியில் எடுத்தோம். கமலோ, ஸ்ரீப்ரியாவோ டப்பிங்கில் கூட ஒரே ஒரு முறை லூப்பைப் பார்ப்பார்கள். அப்படியே பேசிவிடுவார்கள்.
படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனை ஆகிவிட்டது. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, இளையராஜா கூட்டணியில் ஸ்ரீதர் தயாரிப்பில் அப்போது வெளியாகி இருந்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் நன்றாக ஓடியதால் எங்கள் படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வைத்தே படம் எடுத்துவிட்டோம்.
படம் முடிந்து விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினோம். அன்று தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். படம் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் சவக்களை! ரேட் குறைவாகத்தான் விற்றிருந்தோம். எனவே அனைவரும் பிரிண்டுகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நல்ல தியேட்டர்களில் வெளியிடவில்லை. இப்படம் 1978 தீபாவளிக்குரிலீஸ். 12 படங்கள்ரிலீசாகின. கமலுக்குமூன்றுபடம். ரஜினிக்குமூன்றுபடம். ஆனந்தவிகடன் விமர்சனத்தில் எங்கள் படத்துக்குத்தான் குறைவான மார்க்.நூற்றுக்கு 28 மார்க்.
படம்வெளியானதும் மோசமான எதிர்வினை. சில இடங்களில் தியேட்டர் நாற்காலிகளை ரசிகர்கள் உடைத்ததாகத் தகவல். இரண்டே வாரத்தில் தமிழ்நாடு முழுக்க படம் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. படம் ஓடவில்லை. நாங்கள்தோற்று விட்டோம் என்று நினைத்த போது ஓர் அதிசயம் நடந்தது. புகழ்பெற்றஇயக்குநர்மிருணாள்சென்சென்னைக்குவந்துதங்கினார். ஓர் இரவு எதாவது படம் பார்க்கலாமேஎன்றுஅவள்அப்படித்தான்படத்தைதியேட்டரில்பார்த்திருக்கிறார். மறுநாளேஅவர்தான்தங்கியிருந்தஓட்டலுக்குபத்திரிகையாளர்களைவரவழைத்துபடம்மிகவும்அற்புதமாகஉள்ளது. ஏன்நீங்கள்நல்லபடத்தைஆதரிப்பதில்லைஎன்றுபுகழ்ந்துபேட்டிகொடுத்தார். பத்திரிகைகள் அவர்பேட்டியைவெளியிட்டதுடன்ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ருத்ரய்யாபேட்டிகளையும்வெளியிட்டன.
படம் ஓட ஆரம்பித்துவிட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரைபோன்றஇடங்களில் 100 நாள் ஓடியது. இதற்குதமிழகஅரசின்மூன்றுவிருதுகள்கிடைத்தன. எனக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. அது 20 ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. அந்த விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த சாருஹாசன் என்னிடம் சொன்னார். அப்போது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்தததால் ஒளிப்பதிவுக்கான சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் நடுவரான மார்கஸ் பாட்லேயிடம் அவள் அப்படித்தான் படத்தைப் போட்டுக் காட்டவில்லையாம். வண்ணப் படங்களை மட்டும் திரையிட்டுக் காட்டி ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தைப் அவர் தெரிவும் செய்துவிட்டார். சிறந்த இயக்கத்துக்கான படங்களைத் தேர்வு செய்யும் போது எதேச்சையாக மார்க்ஸ் பாட்லே வந்திருக்கிறார். அப்போது எங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார். அதில் ஒளிப்பதிவு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. இதற்குத் தான் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே ஒருவரைத் தெரிவு செய்து விட்டதால் அந்த ஆண்டு முதல் முதலாக இரண்டு விருது கொடுத்தார்கள். ஒன்று சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவுக்காக; இன்னொன்று கருப்பு வெள்ளைக்காக எனக்கு.
(தொகுப்பு: முத்துமாறன்)
அந்திமழை ஏப்ரல்’2013 மாத இதழில் வெளியான சிறப்பு கட்டுரை
|
|