???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல் 0 ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16 0 ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா? 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளுநர் தாமதத்தைக் கண்டித்து சிறையில் நளினி உண்ணாவிரதம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:35:28 IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.
 
இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்துவருகிறார்.
 
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டாலும், 5 மாதங்களாக முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் தாமதத்தைக் கண்டித்து வேலூர் சிறையில் உள்ள நளினி, நேற்று இரவு முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
 
இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...