???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய அரசு தென்மாநிலங்களின் வரிப்பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  09:44:24 IST

ஆந்திர சட்டசபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளன. ஆனால் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது” என்றார். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். ஆந்திர மாநில பிரிவின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தொடர்ந்து ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது என்றார். 
 
“ஆந்திர பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாதா? ஏன் இந்த பாகுபாடு. தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் அது ஏன் கிடையாது?” என கேள்வியை எழுப்பிய சந்திரபாபு நாயுடு, இதில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது என்றார். சட்டசபையில் பேசிய அவர் மத்திய அரசின் மீது நேரடியான எந்தஒரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பா.ஜனதா அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பதை பட்டியலிட்டார். 
 
அருண் ஜெட்லியை சாடிய சந்திரபாபு நாயுடு “மக்களின் உணர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறியுள்ளார். உணர்ச்சியின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்ச்சியின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது?” என கேள்வியை எழுப்பி உள்ளார். சிறப்பு நிதி பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தெலுங்கு தேசம்  அரசு சமர்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்த நிதியை மட்டுமே கேட்கிறோம், கூடுதலாக கேட்கவில்லை என பதில் அளித்துள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...