???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   08 , 2018  23:16:28 IST

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
 
ஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
 
கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.
 
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி, 3 நாள் பயணமாக பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மு.க.ஸ்டாலின் உடனே சென்னை திரும்புகிறார்.
 
இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு ஆகியோர் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கின்றனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...