???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளத்தில் 15 கிளைகளை மூடியது முத்தூட் பைனான்ஸ்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   06 , 2019  02:19:17 IST

பிரபல நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கேரளத்தில் உள்ள தனது 15 கிளைகளை செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் மூடியது.
 
சமீபகாலமாகவே இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளப் பற்றாக்குறை, கொடுப்பனவுகள் முறையாக அளிக்காதது, போனஸ் கொடுக்க மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த காரணங்களை முன்வைத்து ஊழியர்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், செப்டம்பர் 4 முதல் கேரளத்தில் உள்ள 15 கிளைகளை மூடுவதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டது.
 
முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட மேலதிக அறிவிப்பில், மூடப்படும் கிளைகளில் இனி நகைக் கடன் அளிக்கப்படாது. கொடுக்கப்பட்ட கடன்களை முடிப்பதற்கான அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் கடனை செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை மீட்டுக்கொள்ள வேண்டுமென தெரிவித்திருக்கிறது.
 
திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 கிளைகள் இப்போது மூடப்பட்டிருக்கின்றன. ஆண்டுக்கு 2000 கோடி லாபத்தில் இயங்கும் நிறுவனத்தில் நியாயமான ஊதியம் இல்லை என்பது ஊழியர்களின் குற்றச்சாட்டு. ஆனால்,  முத்தூட் பினான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்ஸேண்டர் கூறுகையில், 600 கிளைகள் இருக்கும் கேரளத்தில் கடந்த சில வருடங்களாக 10% அளவில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது, அதிலும் சமீபத்திய வருடங்களில் இது 4%-ஆக குறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், முத்தூட் பைனான்ஸ் கிளைகள் மூடப்பட்டதற்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல், தனது 600 கிளைகளில் 300 கிளைகளை மூடப்போவதாக முத்தூட் நிறுவனமும் அச்சுறுத்தியுள்ளது.

English Summary
Muthoot finance closed 15 branches in kerala

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...