???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருத்தப்பட்ட முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2018  01:36:16 IST

முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் மசோதாவை, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இஸ்லாமியர்கள் பின்பற்றிவரும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி, இதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
 
இதனைத் தொடர்ந்து, கைதுசெய்யப்படும் நபர், ஜாமீன் பெறலாம் என மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதிப்படுத்த, இந்த மசோதாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...