???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிம் பேராசிரியரா? பனாரஸ் பல்கலை சர்ச்சை!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   22 , 2019  07:25:51 IST


Andhimazhai Image
இது நாட்டின் முக்கியமான கல்வி மையங்களுக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சென்னை ஐஐடியில் கேரள இஸ்லாமிய மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவர் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் சில பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டிவிட்டு தற்கொலை செய்திருப்பது, அதைத்தொடர்ந்து சென்னை ஐஐடிமீது பல்வேறுவிதமான ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகள், வெளிப்படைத்தன்மை இன்மை உள்ளிட்ட புகார்கள் எழுகின்றன.
 
புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுப் பிரச்சனை. நாட்டின் முக்கியமான சிந்தனையாளர்களை உருவாக்கித்தரும் இந்த உயர்கல்வி நிலையம் சில ஆண்டுகளாக வலதுசாரி, இடதுசாரி என அரசியலில் பந்தாடப்படுகிறது. கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் காவல்துறையால் பந்தாடப்பட்டனர். தான் ஒரு பேராசிரியர் என்று சொல்லிக்கூட விடாமல் அவரை அடித்து வெளுத்தனர் காவலர்கள் என்றால் போராடிய மாணவர்கள் எப்படித் தாக்கப்பட்டிருப்பர் என்று யோசித்துக்கொள்ளலாம்.
 
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடந்திருப்பது இன்னொரு விரும்பத்தகாத விஷயம். அங்குள்ள சமஸ்கிருதத் துறையில் உதவிப்பேராசிரியராக பெரோஸ்கான் என்ற முஸ்லிம் ஒருவரை நியமித்தனர். சமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிமா என்று எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒரு இந்துதான் இங்கே சமஸ்கிருதம் நடத்தவேண்டும் என்பது இவர்களின் வாதம்.
 
சில நாள் போராட்டத்துக்குப் பின் வகுப்புகள் நடக்க ஆரம்பித்தாலும் பெரோஸ்கான் இன்னும் பொறுப்பேற்க முடியவில்லை. பல்கலைக்கழகம் பேராசிரியர் நியமனத்துக்கு ஆதரவாக இருப்பது ஒன்றுதான் இதில் நம்பிக்கைக்கு உரிய விஷயம். பெரோஸ்கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர் இரண்டாகப் பிரிந்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
 
இன்னொரு பக்கம் பெரோஸ்கானின் தந்தை சொந்த மாநிலமான இந்துகோயில்களில் பஜனை பாடுகிறவராகவும் பசு பாதுகாப்பகம் ஒன்றில் பணிபுரிகிறவராகவும் இருக்கிறார். நமாஸும் செய்கிறார். உள்ளூர் மக்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்கள் குடும்ப ரத்தத்தில் சமஸ்கிருதம் ஓடுகிறது என்கிறார் அவர்.
 
மதம், அரசியல், ஒடுக்குமுறை இவைகளால் ஆன உணர்வுகளால் நம் பல்கலைக்கழகங்கள் பந்தாடப்படுவது மிக துரதிருஷ்டவசமானது. ஒருபுறம் சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் கலக்கவேண்டும் என்று சொல்கிறவர்களே இப்படி நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது.
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...