???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆவணங்கள் தொலைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இசுலாமியர்?

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   04 , 2020  03:13:00 IST


Andhimazhai Image
தனது ஆவணங்கள் தொலைந்ததால் மனமுடைந்து கேரளத்தில் ஓய்வுபெற்ற இசுலாமிய ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
 
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டம், நரிக்குன்னியை சேர்ந்தவர் முகமது அலி, வயது 63. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
 
தனது பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் தொலைந்துபோனதால் முகமது அலி மனமுடைந்து காணப்பட்டிருக்கிறார். தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த இடத்தைவிட்டு தான் நிரந்தரமாக வெளியேற வேண்டியிருக்கும் என அவர் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் முகமது அலி தற்கொலை செய்துகொண்டார்.
 
செங்கோட்போயில் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த முகமது அலி, ஓய்வுபெற்றபின் மனைவி மற்றும் பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். முகமது அலியின் மரணம் குறித்து பேசிய அவரது சகோதரர், "தற்கொலைக்கான காரணம் இதுவா என உறுதியாக தெரியவில்லை. ஆனால், ஆவணங்கள் தொலைந்ததிலிருந்தே அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்" என தெரிவித்துள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...