???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2020  22:34:00 IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி மலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன.  அந்த வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 13 பேரை உயிருடன் மீட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  2வது நாளாக நேற்றுமுன்தினம் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  தொடர்ந்து கொட்டும் மழையில், 3வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது.  இதில் 16 உடல்கள் மீட்கப்பட்டடன.  மீதமுள்ள 19 பேரின் கதி என்ன என தெரியவில்லை.

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  மூணாறு பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான பெட்டிமுடியைச் சேர்ந்த அனந்தசிவன் (வயது 58) நிலச்சரிவு ஏற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அனந்தசிவன், அவருடைய மனைவி வேலுத்தாய் (55), மகன் பாரதிராஜா (35), மருமகள் ரேகா (26) உள்பட அந்த குடும்பத்தினை சேர்ந்த 31 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், பள்ளிக்கூட மாணவர்கள் என தெரியவந்து உள்ளது. இவர்கள், அனைவரும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...