???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாஸ் காட்டிய டி-காக் - 17 ஓவரில் மேட்ச்சை முடித்தது மும்பை இந்தியன்ஸ்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   17 , 2020  00:26:56 IST


Andhimazhai Image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதிய லீக் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மும்பை அணி 17-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு இயான் மோர்கனை கேப்டனாக நியமித்திருந்தனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங்க் செய்தது. கொல்கத்தாவிற்க்கான தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. ராகுல் திரிபாதி (7), நித்திஷ் ராணா (5), சுப்மன் கில் (21), தினேஷ் கார்த்திக் (4) ஆகியோர் சொற்ப ரன்களுடன் வெளியேறினர். அந்த அணி 7.4 ஓவரில் 42 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக களம்புகுந்த கேப்டன் இயான் மோர்கன் நிதானமாக ரன் சேர்த்தார். ரஸல் (12) விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய பேட் கம்மின்ஸ், மோர்கனுடன் சேர்ந்து அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்திருந்தது. மோர்கன் 39 ரன்கள் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கம்மின்ஸ் 53 ரன்கள் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

149 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கூலாக விளையாடி ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ரோஹித் சர்மா (35) அவுட்டானார். மறுபுறம் குவிண்டன் டி-காக் அரைசதம் விளாசி களத்தில் நின்றார். அணியின் ஸ்கோர் 111-ஆக இருந்தபோது சூர்ய குமார் யாதவ் 10 ரன்களில் வெளியேறினார்.

16.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காத டி காக் 44 பந்துகளில் 78 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து மாஸ் காட்டினார். ஹர்திக் பாண்டியா 21 ரன்கள் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- கார்த்திக்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...