![]() |
பலகோடி ரூபாய் மோசடி புகார்; ஹரி நாடார் கேரளாவில் கைது!Posted : புதன்கிழமை, மே 05 , 2021 18:14:32 IST
பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், 16 கோடி ரூபாய் மோசடி புகாரில் கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில், ஹரி நாடார் சுமார் 16 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக ஹரி நாடார் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட ஹரி நாடார், அந்த தொகுதியில் அவர் 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
|
|