![]() |
முள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் அமைக்கப்படும் - துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாPosted : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 10 , 2021 21:49:56 IST
மாணவர்கள் போராட்டத்தை ஏற்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், போரில் இறந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்கப்படும் என யாழ்ப்பான பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா அதற்காக இன்று (திங்கட்கிழமை) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
|
|