அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2022  09:23:46 IST

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விதிகளின்படியே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கேரள முதலமைச்சர் கடந்த 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதனை குறிப்பிட்டு, ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், கடந்த 4ம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது, தண்ணீர் திறக்கப்படுவது தொடர்பாக கேரள அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதைதொடர்ந்தே, 5ம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறியுள்ளார்.
 
8ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 138.85 கன அடி நீர் இருப்பதாகவும், அணைக்கு விநாடிக்கு 6 942 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதகாவும், 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பதிலளித்துள்ளார்.
 
முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய,  அணை நிர்வாகக் குழு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக கேரள அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் அளிக்க, முல்லை பெரியாறு அணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
 
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், கேரள முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...