???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முக்தா சீனிவாசன் : அமரரான நாயகன் படத் தயாரிப்பாளர்!

Posted : புதன்கிழமை,   மே   30 , 2018  03:23:02 IST


Andhimazhai Image
பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
 
காலத்தால் அழியாத ஏராளமான படங்களைத் தந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் படமான மதுரை வீரன் படத்தில் இவர் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிந்தார். இயக்குநராக அறிமுகமாகிய படம் முதலாளி. எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில் 1957ம் ஆண்டு வெளியான முதலாளி படம் தேசிய விருது பெற்றது. அவர் இயக்கிய படங்களில்.. தவப்புதல்வன்.. சினிமாப்பைத்தியம், பொம்மலாட்டம் .. இதயத்தில் நீ என்று துவங்கிப் பெரிய பட்டியல் உண்டு. மொத்தம் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். 40 படங்கள் வரை முக்தா ஆர்ட்ஸ் மூலமாக தயாரித்துள்ளார்.
 
 சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் இருந்த அவர் பாஞ்சாலி, நினைவில் நின்றவள், சூர்யகாந்தி, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் சிவாஜியின் அருணோதயம், ஜெயலலிதா நடித்த படமான சூரியகாந்தி,  ரஜினியின் பொல்லாதவன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும்  கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'நாயகன்' படத்தை தயாரித்தவரும் இவர்தான். இவர் கடைசியாக 'சிவப்பு என்ற படத்தை தயாரித்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர். காங்கிரஸ் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக பணிபுரிந்த அனுபவம் உண்டு. ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.  
 
எழுத்துத் துறையையும் இவர் விட்டு வைக்கவில்லை. இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் கதைகளும் நாவல்களும் ஏராளம் என்றாலும் மிகப் பெருமை சேர்ப்பது எது தெரியுமா? தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது.
 
சில வருடங்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளுக்காக இவர்கள் வீட்டுக்கு வந்து வணங்கி ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வியக்க வைப்பவை. (அப்போது ஜெ முதல்வராக இருந்தார்)
 
நான்கைந்து வருடங்களுக்கு முன் திரு முக்தா ஸ்ரீனிவாசன் மிகவும் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டிருந்தார். எல்லாவித மருத்துவ முயற்சிகளும் டெஸ்ட்களும் செய்து பார்த்தும் பலனில்லை. அப்போது அவரது மகன் திரு. முக்தா ரவி ஒரு ஐடியா செய்தார். அப்பாவுக்கென்று ‘முக்தா சீனிவாசன் பக்கம்’ என்ற ஒன்றை முகநூலில் ஏற்படுத்தி இவரை எழுதுமாறு ஊக்குவித்தார். மெல்ல மெல்ல, எழுத எழுத லைக்குகள் குவியக்குவிய அதையே காரணமாக வைத்து உற்சாகம் மிகுதியில் ஒரு சின்ன டெஸ்க்கை வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்து எழுதித் தள்ள ஆரம்பித்தார். (87 வயது என்று நினைவு). அப்புறம் உடம்பாவது ஒன்றாவது? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்களாம்.
 
அந்த முகநூல் பக்கத்தை எட்டிப்பாருங்கள். வைரச்சுரங்கம். அனுபவப் பெட்டகம். 
 
இன்னும் ஒரு வருஷம் இருந்திருந்தால் தொண்ணூறைத் தொட்டிருப்பார். மொத்தத்தில் நிறைவான வாழ்வு வாழ்ந்திருக்கிறார். திரு.முக்தா சீனிவாசன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 
 
முக்தா சீனிவாசன் அவர்களின் முகநூல் பக்கம்:  https://www.facebook.com/pg/mukthasrinivasan/posts/
 
 
 
- வேதா கோபாலன். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...